OVERSEAS MANPOWER CORPORATION LTD (A Government of Tamilnadu Undertaking) Chennai Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளிநாடுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | அயல் நாடு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. ஸ்டாப் நர்ஸ்
மொத்த பணியிடங்கள்: 50 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
i) டிப்ளமோ நர்சிங் (Diploma In General Nursing and Midwifery), B.Sc நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) சவுதி Prometric மற்றும் Data flow கட்டாயமாகும்.
வயது வரம்பு:
30.09.2021 -ன் படி குறைந்தப்பட்சம் 22 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 80,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,20,000 வரை வழங்கப்படும்.
விமான பயண சீட்டு, தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய அனைத்தும் இலவசம்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
ஸ்கைப்/ ஸூம் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் பாஸ்போர்ட் நகல், கல்வி தகுதி சான்றிதழ் நகல் மற்றும் அனுபவம் சான்றிதழ் நகல் (இருப்பின்) ஆகிய அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) ஸ்கேன் செய்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2021
OMCL – யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
8220634389 / 044- 22505886 / 22502267 / 22500417.
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!