You dont have javascript enabled! Please enable it!

சிவகங்கை மாவட்டம் சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 30 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

RNTCP – NTEP Recruitment Notification 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சிவகங்கை மாவட்ட சுகாதாரச்‌ சங்கம்‌ தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டத்தில்‌ காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு பதினோரு மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில்‌ பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட சுகாதார சங்கம் - தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | NTEP Jobs - YouTube



வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

2. ஆய்வக நுட்புநர்

கல்வித் தகுதி:

1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாவட்ட திட்ட மேலாண்மை அல்லது மருத்துவமனை நிர்வாகத்தில் எம்.பி.ஏ முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) ஓராண்டு பணியில் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

2. ஆய்வக நுட்புநர்

i) அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக நுட்பனர் பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii. கணினி உபயோகிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 65 வயதிற்கும் மிகாமல் இருக்க வேண்டும்‌.




சம்பள விகிதம்:

1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

மாநில சுகாதாரச்‌ சங்கம்‌ NTEP வழிகாட்டுதலின்‌ படி மாதம் தொகுப்பூதியம்‌ ரூ. 20,000/- வழங்கப்படும்‌.

2. ஆய்வக நுட்புநர்

மேற்கண்ட பதவிகளுக்கு மாநில சுகாதாரச்‌ சங்கம்‌ NTEP வழிகாட்டுதலின்‌ படி மாதம் தொகுப்பூதியம்‌ ரூ. 10,000/- வழங்கப்படும்‌.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின்‌ (கல்வி சான்றிதழ்கள்‌, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ்‌, இருப்பிட சான்றிதழ்‌, ஆதார்‌ அட்டை, பான்‌ கார்டு, கணினி சான்றிதழ்‌, முன்‌ அனுபவ சான்று மற்றும்‌ வாகன ஓட்டுநர்‌ உரிமம்‌) ஆகியவற்றின்‌ நகல்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

தபால்‌ உறையின்‌ மேல்‌ பதவியின்‌ பெயரை கட்டாயம்‌ குறிப்பிட வேண்டும்‌.

விண்ணப்பதாரர்கள்‌ தாங்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களுடன்‌ சான்றொப்பமிட்ட நகல்கள்‌ (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்‌. அடிப்படை தகுதியில்‌ ஏதாவது ஒரு சான்றிதழ்‌ விடுபட்டுயிருந்தாலும்‌ விண்ணப்பதாரர்‌ தகுதியற்றவராக கருதப்படுவார்‌.

இத்துடன்‌ ரூ. 10/- தபால்‌ தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4″ x 10″ தபால் கவருடன்‌ கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில்‌ விண்ணப்பிக்கவும்‌.




தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர். விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில்‌ நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2021 மாலை 5 மணிக்குள்

 தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

 இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் காசநோய் அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவ மருத்துவமனை வளாகம், சிவகங்கை – 630 561.




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்