You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் ,
நகார் ) திருவல்லிக்கேணி, சென்னை-5.

 

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

 ந க.எண். 83/2022/அ5




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 20,05.2022 மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



பணியின் பெயர் காலியிடங்கள்
உதவி மின்பணியாளர் 1
அலுவலக உதவியாளர் 1
கடைநிலை ஊழியர் 2
திருவிலகு 2
இரவுக் காவலர் 1
உதவி கைங்கர்யம் 1
சன்னதி தீவட்டி 1
உதவி பரிச்சாரகர் 1
கால்நடை பராமரிப்பு 1
மொத்த பணியிடங்கள் 11
பணியிடம் அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை

கல்வித்தகுதி:

1. உதவி மின்பணியாளர்

i) அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம்  வழங்கல் வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ii) 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) தமிழ் பொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்

i) 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

iii) கணினி அறிவு பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

3. கடைநிலை ஊழியர்

i) 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

iii) கணினி அறிவு பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4. திருவிலகு

தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. இரவுக் காவலர்

தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. உதவி கைங்கர்யம்

i) தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ii) யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
(தென்கலை வைணவ பிராமணர்கள் பட்டும்)

7. சன்னதி தீவட்டி

i) திருக்கோயிலில் தீவட்டி பணி பார்த்த அனுபவம்.

ii) தீவட்டி தயாரித்து பயன்படுக்க தெரிந்திருக்க வேண்டும்.

iii) தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

8. உதவி பரிச்சாரகர்

i) தமிழ் பொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ii) இத்திருக்கோயிலின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் பற்றும் பிரசாதம் தயாரிக்கத்
தெரிந்திருக்க வேண்டும்.
(தென்கலை வைணவ பிராமணர்கள் பட்டும்)

9.கால்நடை பராமரிப்பு

தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.04.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

பணியின் பெயர் ஊதிய விகிதம்
உதவி மின்பணியாளர் Pay Matrix 18 – 16600 – 52400
அலுவலக உதவியாளர் Pay Matrix 17 – 15900 – 50400
கடைநிலை ஊழியர் Pay Matrix 17 – 15900 – 50400
திருவிலகு Pay Matrix 17 – 15900 – 50400
இரவுக் காவலர் Pay Matrix 17 – 15900 – 50400
உதவி கைங்கர்யம் Pay Matrix 16 – 15700 – 50000
சன்னதி தீவட்டி Pay Matrix 12 – 11600 – 36800
உதவி பரிச்சாரகர் Pay Matrix 10 – 10000 – 31500
கால்நடை பராமரிப்பு Pay Matrix 10 – 10000 – 31500
விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பட்டுமே பரிசீலனைக்கு எற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து திருக்கோயிலுக்கு வரப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்  நேர்காணலுக்கான அறிவிப்பு வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

i) ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

ii) விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுக்கு ஜெராக்ஸ் நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ் எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ் நேர்முகத்தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(iii) பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் உடல் தகுதி சான்று பெற்று அதன் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

iv) மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை நமது இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் சான்றொப்பம் (Attested Xerox copies only) பெற்று அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் பெற்று இணைக்கப்பட வேண்டும். மேற்படி சான்று அறிவிப்பு தேதிக்கு பின் பெற்றிருக்க வேண்டும்.

v) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் “——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.




இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்:

1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல் (எண். 1, 2 & 3 பணியிடத்திற்கு மட்டும்).
3) பள்ளி மாற்று சான்று நகல் (எண். 1, 2 & 3 பணியிடத்திற்கு மட்டும்).
4) மின் / மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் (எண். 1 பணியிடத்திற்கு மட்டும்).
5) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
6) ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் (எண். 6 பணியிடத்திற்கு மட்டும்).
7) குடும்ப அடையாள அட்டை நகல்
8) உடல் தகுதி சான்று
9) காவல்துறை நன்னடத்தை சான்றிதழ்
10) சுயவிலாசமிட்டு 25.ரூபாய் தபால் தலையுடன் கூடிய உரை-1.

குறிப்பு:
விண்ணப்பப்படிவம் நமது இணையத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசிநாள் 20-05-2022 மாலை 5.45 மணி
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் ,
திருவல்லிக்கேணி, சென்னை-5

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் [PDF] (21-04-2022 அன்று அப்டேட் செய்யப்படும்) இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்