You dont have javascript enabled! Please enable it!

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புகள் 2022
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment Notification 2022




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதியதாக தொடங்கப்படவுள்ள மனநல மறுவாழ்வு இல்லத்திற்கு கீழ்க்கண்ட விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி

பணியிட விபரங்கள்:

1. மனநல மருத்துவர் (Psychiatrist) (பகுதி நேரம்) – 1 பதவி

2. மருத்துவ அலுவலர் – 1 பதவி

3. செவிலியர் (உறைவிடர்) -2 பதவிகள்

4. இல்ல காப்பாளர் – 1 பதவி

5. சமூகப் பணியாளர் -2 பதவிகள்

6. பராமரிப்பு உதவியாளர் – 4 பதவிகள்

7. தொழிற் பயிற்சியாளர் – 1 பதவி

8. பாதுகாவலர் – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மனநல மருத்துவர் (Psychiatrist) (பகுதி நேரம்)

i) இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (எம்.பி.பி.எஸ்.) பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மனநல மருத்துவம் (DPM) டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) TNMSE -ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2. மருத்துவ அலுவலர்

i) இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (எம்.பி.பி.எஸ்.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) TNMSE -ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. செவிலியர் (உறைவிடர்)

Auxiliary Nurse மற்றும் Mid wife Certificate (ANM) அல்லது General Nurse & Mid Wife Certificate (GNM) அல்லது Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. இல்ல காப்பாளர்

Master of Social welfare (MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. சமூகப் பணியாளர்

Degree in Bachelor of Social Welfare (BSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பராமரிப்பு உதவியாளர்

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (any Bachelor Degree) பெற்றிருக்க வேண்டும்.

7. தொழிற் பயிற்சியாளர்

ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்பில் இளங்கலை பட்டம் (Bachelor Degree in any Vocational Courses)
பெற்றிருக்க வேண்டும்

8. பாதுகாவலர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மனநல மருத்துவர் (Psychiatrist) (பகுதி நேரம்)

2. மருத்துவ அலுவலர்

3. செவிலியர் (உறைவிடர்)

4. இல்ல காப்பாளர்

5. சமூகப் பணியாளர்

6. பராமரிப்பு உதவியாளர்

7. தொழிற் பயிற்சியாளர்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்  18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பாதுகாவலர்

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

ஒப்பந்த ஊதியம் (Consalidated Payment) மாதம் ஒன்றுக்கு

1. மனநல மருத்துவர் (Psychiatrist) (பகுதி நேரம்)

ரூ.20,000/- (வாரம் ஒரு முறை ஒரு நேரம் மாதத்திற்கு நான்கு நாட்கள் நான்கு முறை மட்டும்)

2. மருத்துவ அலுவலர்

ரூ.25,000/- (நாள் ஒன்றிக்கு ஒரு நேரம் மாதம் ஒன்றுக்கு 22 நேரம் மட்டும் வருகை)

3. செவிலியர் (உறைவிடர்)

ரூ.18,000/-

4. இல்ல காப்பாளர்

ரூ.25,000/-

5. சமூகப் பணியாளர்

ரூ.18,000/-

6. பராமரிப்பு உதவியாளர்

ரூ.10,000/-

7. தொழிற் பயிற்சியாளர்

ரூ.12,000/-

8. பாதுகாவலர்

ரூ.9,000/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

ராஜீஹத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

நிபந்தனைகள்:

i) இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ii) தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

iii) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

iv) விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதிச் சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ii) விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

iii) விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

iv) விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று
நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

v) விண்ணப்பதாரரின் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதார்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) மேலொப்பம் பெறப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 06-06-2022

HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் (Official Notification & Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், 315 தலைமை அலுவலகம், North Giri Street, பழனி, திண்டுக்கல் – 624601.



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்