மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் (MNREGS) இந்திய அரசு, மத்திய ஊரக மேலாண்மை அமைச்சகம் மூலம் நாடெங்கிலும், மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இந்த திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள வேலையில்லா நபர்களுக்கு அவர்களுடைய வீட்டின் 5 கி.மீ சுற்றளவில் உள்ள இடத்தில் வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலையளிப்பதாகும்.
இத்திட்டத்தின் (MNREG Act 2005) கீழ் வேலைக்கு விண்ணப்பித்துள்ள எந்த ஒரு நபரும் இன்று வரை வேலைக்கான அட்டை கிடைக்கவில்லை என்றாலும் அல்லது அவருக்கு வேலைக்கான கூலி சரிவர வழங்கப்படவில்லை என்றாலும் அல்லது கூலி குறைவாக கொடுத்தாலும் அவர்கள் தங்களுடைய குறைகளை விண்ணப்பமாக இணையம் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அக்குறைகளை தீர்ப்பதற்காக தெரிவிக்கலாம்.
எப்பொழுது MNREGS பற்றிய குறைகளை பதிவு செய்யலாம்?
கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் குறையினை பதிவு செய்யலாம்.
பதிவு அல்லது வேலை அட்டை:
- கிராம பஞ்சாயத்தில் வேலை அட்டைக்கு பதிவு செய்து கொள்ளாவிடில்
- கிராம பஞ்சாயத்து வேலை அட்டையினை கொடுக்காமல் இருந்தால்
- வேலை செய்பவர்களுக்கு வேலை அட்டை கொடுக்காமல் இருந்தால்
பணம் கொடுத்தல்:
- பணம் கொடுப்பதில் கால தாமதம்
- பகுதி அளவு பணம் கொடுத்தல்
- பணம் கொடுக்காமல் இருத்தல்
- பணம் கொடுப்பதில் முறையற்ற செயல்முறை
அளவு:
- கால அளவு சரியாக பின்பற்றப்படாதது
- சரியாக அளவிடாதது
- அளப்பதற்கு பொறியாளர் வராமல் இருப்பது
- அளப்பதற்குரிய கருவிகள் இல்லாமல் இருப்பது
வேலைக்கான தேவை:
- தேவையினை பதிவு செய்யாமல் இருத்தல்
- தேதியிட்ட ரசீதினை கொடுக்காமல் இருத்தல்
வேலை அளித்தல்:
- வேலை இல்லாமல் இருத்தல்
- 5 கி.மீ சுற்றளவுக்குள் வேலை அளிக்காமல் இருத்தல்
- 5 கி.மீ சுற்றளவுக்கு மேல் வேலை அளித்தால் பயணச்செலவு மற்றும் தினப்படி அளிக்காமல் இருத்தல்
- குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை அளிக்காமல் இருத்தல்
வேலை மேலாண்மை:
- வேலை உருவாக்கப்படாமல் அல்லது தொடங்கப்படாமல் இருத்தல்
- வேலைக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாமை
- திறமையுள்ள அல்லது பகுதி திறமையுள்ளவற்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருத்தல்
வேலையில்லா நாட்களுக்கான படிகள்:
- வேலையில்லா நாட்களுக்கான படிகள் வழங்காமலிருத்தல்
- விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளாமலிருத்தல்
நிதி:
- நிதி இல்லாமல் இருத்தல்
- நிதி கணக்கிற்கு மாற்றப்படாமல் இருத்தல்
- பணம் பரிமாற்றத்தில் இருத்தல்
- வங்கிகள் கூலியினை பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் வசூலித்தல்
பொருட்கள்:
- பொருட்கள் இல்லாமை
- விலையேற்றம்
- தரக்குறைவான பொருட்கள்
யார் குறைகளுக்கான விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்?
- வேலை செய்பவர்
- குடிமகன்
- அரசு சாராத தொண்டு நிறுவனங்கள்
- ஊடகங்கள்
- முக்கிய பிரமுகர்கள்
குறைகளை பதிவு செய்யும் முறை!
MNREGS திட்டம் தொடர்பான குறைகளை இணையம் மூலம் பதிவு செய்ய கீழ்க்கண்ட செய்முறை வழிகளை பின்பற்றவும்
படி 1. MNREGS திட்டம் தொடர்பான குறைகளை பதிவு செய்ய கீழே கொடுக்கப்ப்ட்டுள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள்
படி 2. தமிழ் மாநிலத்தின் இணைய பக்கம் வரும்
படி 3. ஒரு விண்ணப்பம் திரையில் தோன்றும்
படி 4. உங்களுடைய அடையாளத்தை தேர்ந்தெடுக்கவும், அதாவது வேலை செய்பவர், குடிமகன், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் அல்லது முக்கிய பிரமுகர்
படி 5. MNREGS திட்டத்திலுள்ள முறைகேடுகள் தொடர்பான விவரங்களை பெற்ற ஆதாரத்தினை தேர்வு செய்யவும்
படி 6. தேவைப்பட்ட விவரங்களை அந்த கட்டங்களில் நிரப்பி ‘Submit Complaint’ என்ற பொத்தானை சொடுக்கவும்
பதிவு செய்யப்பட்ட குறைகள் பற்றிய விண்ணப்பத்தின் நிலவரம்
உங்களுடைய குறையினை பதிவு செய்யதவுடன் உங்களுடைய குறைகள் பற்றிய விண்ணப்பத்தின் நிலை அதாவது அவ்விண்ணப்பம் பரிசீலீக்கப்பட்டு, அக்குறை நீக்கப்பட, நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது பற்றி நீங்கள் சோதித்து அறிந்துகொள்ளலாம்.
MNREGS பற்றிய குறைகள் பதிவு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்.