தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி வேலைவாய்ப்புகள் 2021
National Institute of Technology – NIT Trichy Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் & ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. மருத்துவ அதிகாரி
2. செவிலியர்
கல்வித் தகுதி:
1. மருத்துவ அதிகாரி
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து MBBS பட்டம் மற்றும்
மாநில மருத்துவ கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. செவிலியர்
இந்திய நர்சிங் கவுன்சில்/அந்தந்த மாநில நர்சிங் அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து B.Sc. (நர்சிங்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இந்திய /மாநில செவிலியர் கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மருத்துவ அதிகாரி
அதிகப்பட்சம் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. செவிலியர்
அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. மருத்துவ அதிகாரி
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 65,000 வழங்கப்படும்.
2. செவிலியர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 18,382 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
i) மேற் குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் (பயோடேட்டா) தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பிக்கவும்.
ii) மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுல் டாக்ஸ் இணைப்பை நிரப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் & நேரம்: 27.10.2021 மாலை 05:30
NITஅதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி: rcrep@nitt.edu
கூகுல் டாக்ஸ் மூலம் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!