திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
Tiruvallur District Health Society – DHS Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு பணிகளை மேம்படுத்த திருவள்ளூர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அமையவிருக்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் (District Tobacco Control Cell) கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)
2. சமூக தொழிலாளி (Social worker)
3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)
கல்வித்தகுதி:
1. மாவட்ட தர ஆலோசகர் (District Consultant)
i) Public Health அல்லது Social Sciences அல்லது Management அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
ii) MBBS/BDS மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.
2. சமூக தொழிலாளி (Social worker)
i) Sociology அல்லது Social work முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Sociology அல்லது Social work இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.
3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)
12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி கல்வி கற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு வருடம் தொடர்புடைய பணி அனுபவம்.
வயது வரம்பு:
01-01-2022 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 35,000 வழங்கப்படும்.
2. சமூக தொழிலாளி (Social worker)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 13,000 வழங்கப்படும்.
3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோடு செய்துக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (Self Attested) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-12-2021 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
54/5 ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம் – 602001
திருவள்ளூர் மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
திருவள்ளூர் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்