நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC Nagappattinam Dist Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நாகப்பட்டினம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. பட்டியல் எழுத்தர் – 119 பதவிகள்
2. உதவுபவர் – 127 பதவிகள்
3. காவலர் – 58 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 304 பதவிகள்
கல்வித் தகுதி:
1. பட்டியல் எழுத்தர்
ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பி.எஸ்.சி. (அறிவியல்) முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. உதவுபவர்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. காவலர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகப்பட்சம் SC. SC(A), ST பிரிவினர் 37 வயது வரையும், MBC/MBC(V) மற்றும் BC BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. பட்டியல் எழுத்தர்
தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6459/- வழங்கப்படும்
2. உதவுபவர்
3. காவலர்
மேற்கண்ட பணியிடங்களுக்கு தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ. 6408/- வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்களின் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் (Certificate Xerox Copy) சுய ஒப்பமிட்டு (Self attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-11-2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் – 611003
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 05 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!