நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Nagapattinam Public Health Department (District Health Society) Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் திட்ட பணிகளுக்கு கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்
2. ரெப்ரிரேஷன் மெக்கானிக்
3. ஓட்டுனர்
கல்வித் தகுதி:
1. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்
MCA.,/ BE.,/ B.Tech உடன் தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம் |
2. ரெப்ரிரேஷன் மெக்கானிக்
ரெஃப்ரிஜரேஷன் மெக்கானிக் மற்றும் ஏர் கண்டிஷனிங்கில் (MRAC) ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் 1 வருட முன்பணி அனுபவம் இருக்க வேண்டும். |
3. ஓட்டுனர்
10-ம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக வாகனம் கையாளுவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். |
வயது வரம்பு:
பதவியின் பெயர் | வயது வரம்பு |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | 21 வயது முதல் 35 வயதுக்குள் |
ஓட்டுனர் | 21 வயது முதல் 35 வயதுக்குள் |
ரெப்ரிரேஷன் மெக்கானிக் | 21 வயது முதல் 35 வயதுக்குள் |
சம்பள விகிதம்:
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி கீழ்கண்டவாறு மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.
பதவியின் பெயர் | மாத ஊதியம் |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | ரூ. 16,500 |
ஓட்டுனர் | மாவட்ட ஆட்சியர் நிர்ணய தினகூலி |
ரெப்ரிரேஷன் மெக்கானிக் | ரூ. 20,000 + TA ரூ. 3,000 |
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம். புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.05.2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், நாகப்பட்டினம் மாவட்டம்.
இதையும் படிங்க: நாகப்பட்டினம் மாவட்டம் கல்வி விடுதிகளில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 May 2022
நாகப்பட்டினம் மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!