மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய்த்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
District Collector Office Revenue Department Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. அலுவலக உதவியாளர் (Office Assistant)
மொத்த பணியிடங்கள்: 12 பதவிகள்
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1.7.2021-ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) ஆகியோருக்கு அதிகபட்ச வயதாக 37 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகியோருக்கு 34 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத ஊதியம்:
(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் குறைந்தப்பட்சம் ரூ.15,700 முதல் அதிகப்பட்சம் 58,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
அரசின் அடிப்படை பணியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
நேர்காணலின்போது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (ம) இதர அசல் சான்றிதழ்களுடன் வரப்பெற வேண்டும்.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி / அகவிலைப்படி அளிக்கப்படமாட்டாது. விண்ணப்ப படிவத்தில் ஒட்டி அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் போன்று இரண்டு (2) புகைப்படங்கள் நேர்காணலின் போது எடுத்து வர வேண்டும்.
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவரம் (Bio Data), கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ. 25/-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25-10 செ.மீ. அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
குறிப்பு:
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-12-2021 மாலை 5:45 மணிக்குள்
அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை.
மயிலாடுதுறை மாவட்ட அரசு இணையத்தளம் (Official Dist Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Carrer Page)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்