அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை.
(வேலைவாய்ப்பு அறிவிக்கை)
ந.க.எண்.285/2022/ஆ1
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள பணியாளர்களை நியமனம் செய்திட இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து 18.08.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விபரங்கள்:
1. தாளம் – 1 பதவி
2. வேதபாராயணம் உபகோயில் – 2 பதவிகள்
3. ஒதுவார் – 1 பதவி
4. உதவி பரிசாரகர் – 4 பதவிகள்
5. உதவி யானைப் பாகன் – 1 பதவி
6. கருணை இல்லக் காப்பாளர் – 1 பதவி
7. கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் – 2 பதவிகள்
8. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) – 1 பதவி
9. ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் – 1 பதவி
10. பிளம்பர் – 1 பதவி
11. சமையல்காரர் உதவி – 1 பதவி
12. சமையல்காரர் – 1 பதவி
13. துப்புரவு (சுத்தம் செய்பவர்) – 1 பதவி
மொத்த காலிப்பணியிடங்கள்: 18 பதவிகள்
கல்வித்தகுதி:
1. தாளம்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. வேதபாராயணம் உபகோயில்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேத பாட சாலையில் தொடர்புடையதுறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
3. ஒதுவார்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் இது தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
4. உதவி பரிசாரகர்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
5. உதவி யானைப் பாகன்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
யானைக்குப் பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
6. கருணை இல்லக் காப்பாளர்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
7. கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
8. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)
கட்டட பொறியியலில் பட்டயபடிப்பு
9. ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்
அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும்
இயந்திரத்துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. பிளம்பர்
அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும்
தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. சமையல்காரர் உதவி
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும்
50 அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. சமையல்காரர்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும்
உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
13. துப்புரவு (சுத்தம் செய்பவர்)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1. தாளம்
ரூ.18500-58600 Pay Matrix Level22
2. வேதபாராயணம் உபகோயில்
ரூ.15700-50,000 Pay Matrix Level 16
3. ஒதுவார்
ரூ.12600-39900 Pay Matrix Level 13
4. உதவி பரிசாரகர்
ரூ.10000-31500 Pay Matrix Level10
5. உதவி யானைப் பாகன்
ரூ.11600-36800 Pay Matrix Level12
6. கருணை இல்லக் காப்பாளர்
ரூ.15900-50400 Pay Matrix Level 17
7. கால்நடை பராமரிப்புத் தொழிலாளர்
ரூ.10,000-31500 Pay Matrix Level10
8. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)
ரூ.20600-65500 Pay Matrix Level27
9. ஜெனரேட்டர் ஆப்ரேட்டர்
ரூ.16600-52400 Pay Matrix Level 18
10. பிளம்பர்
ரூ.18000-56900 Pay Matrix Level 19
11. சமையல்காரர் உதவி
ரூ.13200-41800 Pay Matrix Level 14
12. சமையல்காரர்
ரூ.11600-36800 Pay Matrix Level 12
13. துப்புரவு (சுத்தம் செய்பவர்)
ரூ.10000-31500 Pay Matrix Level 10
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
கருணை இல்லக் காப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.100/-ஐ திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் வரிசை எண் இட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலக வேலைநாட்களில் அலுவலக வேலைநேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 18-08-2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பங்கள் பெற/சமர்பிக்க வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை.
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்