You dont have javascript enabled! Please enable it!

மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வேலைவாய்ப்புகள் 2021

Madurai Government Rajaji Hospital Recruitment Notification 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மாநில திட்டக் குழுவின் (National Health Mission) மூலம் ஒதுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மட்டும் நியமனம் செய்து கொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Madurai Rajaji Hospital Recruitment | மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி





பணியிட விபரங்கள்:

1. உளவியலாளர்

2. சமூக தொழிலாளி

3. மருத்துவமனை தொழிலாளி

4. சுகாதார தொழிலாளி

5. பாதுகாவலர்

6. பதிவு உதவியாளர்

7. ED செயலாளர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. உளவியலாளர்

M.Sc (Psy) அல்லது M.Phil Clinical Psy அல்லது M.A. அல்லது M.Sc. Psy. முடித்திருக்க வேண்டும். மற்றும் NIMHAN போன்ற நிறுவனம் அல்லது வேறு ஏதேனும்  நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சமூக தொழிலாளி

M.A. Social work (Medical அல்லது Psychiatry) அல்லது Master of Social Work (Medical/Psychiatry) முடித்திருக்க வேண்டும். ஏதேனும்  நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

3. மருத்துவமனை தொழிலாளி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. சுகாதார தொழிலாளி

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. பாதுகாவலர்

8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னால் ராணுவ வீரர் விண்ணப்பிக்கலாம்.

6. பதிவு உதவியாளர்

ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். மற்றும் அடிப்படை கணினி இயக்கும் அறிவு இருக்க வேண்டும்.

7. ED செயலாளர்

Accidental and Emergency Care அல்லது Physician Assistant பாட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அடிப்படை கணினி இயக்கும் அறிவு இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 55 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

1. உளவியலாளர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000/- வழங்கப்படும்.

2. சமூக தொழிலாளி

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000/- வழங்கப்படும்.

3. மருத்துவமனை தொழிலாளி

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 5,000/- வழங்கப்படும்.

4. சுகாதார தொழிலாளி

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 5,000/- வழங்கப்படும்.

5. பாதுகாவலர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 6,300/- வழங்கப்படும்.

6. பதிவு உதவியாளர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000/- வழங்கப்படும்.

7. ED செயலாளர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 20,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தேவையான கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் கையொப்பம் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும், இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2021

விண்ணப்பம் சமர்பிக்க / அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை. 20.

மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையதளம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்