மதுரை மாவட்டம் “சகி” பெண்கள் வள மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Madurai District One Stop Center – OSC Recruitment Notification 2022
Saki Women’s Resource Centre Madurai District Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
மதுரை மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop centre) துவங்கப்படவுள்ளது. அதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சுழற்சி முறையில் பணிபுரிய, ஒப்பந்த அடிப்படையில் மதுரை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. வழக்கு பணியாளர் (Case Worker) – (பெண் மட்டும்)
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) – (பெண் மட்டும்)
3. பாதுகாவலர் (Security Guard) – (ஆண் மட்டும்)
கல்வித்தகுதி:
1. வழக்கு பணியாளர் (Case Worker)
சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலைப் பட்டம் (BSW) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 1 வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவையை வழங்க அவர் ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டும்.
4. பாதுகாவலர் (Security Guard)
பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பாதுகாவலராக 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
31-12-2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
1. வழக்கு பணியாளர் (Case Worker)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 6,400/- வழங்கப்படும்.
3. பாதுகாவலர் (Security Guard)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 10,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (xerox) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பாதுகாவலர் (Security Guard) பதவிக்கு ஆண் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-01-2022 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், மதுரை – 20.
மதுரை மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
மதுரை மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்