காஞ்சிபுரம் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Recruitment of various Posts in Kanchipuram District Collector Office
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. ஆற்றுப்படுத்துநர்
2. வெளியூர் தொழிலாளர்கள்
கல்வித் தகுதி:
1. ஆற்றுப்படுத்துநர்
i) பட்டதாரி / முதுநிலை பட்டதாரி
ii) உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களில் / வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
2. வெளியூர் தொழிலாளர்கள்
i) 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii) குழந்தைகள் தொடர்பான சான்றிதழ் படிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
iii) குழந்தைகள் தொடர்பான பணியில் ஓராண்டு அனுபவம் விரும்பப்படுகிறது.
வயது வரம்பு:
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு)
அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 45 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 43 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. ஆற்றுப்படுத்துநர்
ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/-
2. வெளியூர் தொழிலாளர்கள்
ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.8,000/-
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றிதழ் நகல்களுடன் தபால்/கொரியர் மூலமாக விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.05.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்: 317, K.T.S மணி தெரு, மாமல்லன் நகர்,
காஞ்சிபுரம் – 631502
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்