You dont have javascript enabled! Please enable it!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் “சகி” பெண்கள் வள மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

One Stop Center (OSC), Kallakurichi District Recruitment Notification 2022

Saki Women’s Resource Centre Kallakurichi District Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி (அ) தபால்

பணியிட விபரங்கள்:

1. வழக்கு பணியாளர்கள் – 4 பதவிகள்

2. பல் நோக்கு உதவியாளர் – 1 பதவி

3. பாதுகாவலர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 6 பதவிகள்

கல்வித்தகுதி:

1. வழக்கு பணியாளர்

i) சமூகப்பணியில் முதுகலை அல்லது சட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

ii) பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணிபுரிந்த அனுபவம்.

2. பல் நோக்கு உதவியாளர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மைய பராமரிப்பு வேலை மற்றும் சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

iii) மூன்று வருட முன் அனுபவம் வேண்டும்.

3. பாதுகாவலர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) இரண்டு வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

31-03-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.



மாத ஊதியம்:

1. வழக்கு பணியாளர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 15,000/- மற்றும் சிறப்பு ஊதியமாக ரூ. 3,000 கூடுதலாக அளிக்கப்படும்.

2. பல் நோக்கு உதவியாளர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 6,400/- வழங்கபடும்.

3. பாதுகாவலர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000/- வழங்கபடும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (xerox) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ/தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: சேலம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 April 2022

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-04-2022 மாலை 5:00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம்,
கள்ளக்குறிச்சி – 606202.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்