You dont have javascript enabled! Please enable it!

இலவச ஐடிஐ தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..


சென்னையில் உள்ள மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.








இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.







2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான கணினி இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம் பழுது நீக்குநர், மின் பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் பிட்டர் ஆகிய பயிற்சிப் பிரிவுகளில் 184 காலியிடங்கள் உள்ளன.




இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பேருந்து அட்டை மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும். பயிற்சி முடிப்போருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.




தொழிற் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் ஹவுஸ், ராயப் பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம்.




மேலும், மாணவர்கள் பயிற்சியில் சேரும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.







குழாய் பொருத்துநர் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் :044 28473117 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு:

சர்வர் முடக்கத்தினால் மேற்கண்ட இணையதளத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் அரசு அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.



வாட்சப் குழுவில் இணைய

டெலிகிராம் குழுவில் இணைய







இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்