You dont have javascript enabled! Please enable it!

திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் (HRCE) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்து சமய அறநிலையத்துறை (HRCE) வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாலேசுவரர் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி

பணியிட விபரங்கள்:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

2. செவிலியர் (Staff Nurse)

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker / Attender)

கல்வித் தகுதி:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

MBBS Qualified under TWMSE (Medical Officer)

2. செவிலியர் (Staff Nurse)

Staff Nurse – MLHC DGNM (Diploma in General Nursing and Midwifery)

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker / Attender)

8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

2. செவிலியர் (Staff Nurse)

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர் 01.09.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker / Attender)

விண்ணப்பதாரர் 01.09.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

1. மருத்துவ அலுவலர் (Medical Officer)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 75,000/- வழங்கப்படும்.

2. செவிலியர் (Staff Nurse)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 14,000/- வழங்கப்படும்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker / Attender)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 6000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

ராஜீஹத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

நிபந்தனைகள்:

i) இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ii) தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

iii) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

iv) விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ii) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

iii) விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

iv) நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

v) விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை அருள்மிகு அருணாலேசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 12.11.2021 மாலை 5.45 மணி

12.11.2021-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அருணாலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை. 606601.




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்