You dont have javascript enabled! Please enable it!

HRCE – திருச்சி மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 13 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department – TNHRCE Trichy Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்ளுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. ஆகம ஆசிரியர்

2. சமையலர்

3. சமையல் உதவியாளர்

4. எழுத்தர்

5. அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

1. ஆகம ஆசிரியர்

i) ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் (வைணவம்) ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

ii) வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. சமையலர்

i) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ii) 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. சமையல் உதவியாளர்

i) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

11) உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. எழுத்தர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5. அலுவலக உதவியாளர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அல்லது தகுதியான நபர்கள் இல்லை என்றாலோ 35 வயதைக் கடந்த விண்ணப்பதாரர்கள் பரிசீலக்கப்படுவர்.




சம்பள விகிதம்:

1. ஆகம ஆசிரியர்

மாதம் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியமாக (Level 32 ன்படி) ரூ. 36,000 முதல் 1,14,000 வரை அளிக்கப்படும்.

2. சமையலர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12,000 அளிக்கப்படும்.

3. சமையல் உதவியாளர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 அளிக்கப்படும்.

4. எழுத்தர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 அளிக்கப்படும்.

5. அலுவலக உதவியாளர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 7,500 அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை நமது இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் சான்றொப்பம் (Attested Xerox copies only) பெற்று அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் பெற்று இணைக்கப்பட வேண்டும். மேற்படி சான்று அறிவிப்பு தேதிக்கு பின் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் “——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

திருக்கோயில் இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form)  இங்கே கிளிக் செய்யுங்கள்

 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்