You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் இந்துசமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




இந்துசமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்.
email-vaammankoil@gmail.com தொலைபேசி எண். 04254-297 226- 04254-292 656

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு கீழ்க்காணும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.07.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



வ எண் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
வெளித்துறை பணியிடங்கள்
1 இளநிலை உதவியாளர் 1
2 சீட்டு விற்பனையாளர் 3
3 திருவலகு 5
4 காவலர் 5
5 பலவேலையாள் 3
6 ஏவலர் 2
7 பெருக்குபவர் 8
உள்துறை பணியிடங்கள்
8 உதவிப் பரிச்சாரகர் 1
9 மாலைகட்டி 1
10 உதவி பூசாரி (தொகுப்பூதியம்) 6
தொழில்நுட்ப பணியிடங்கள்
11 தொழில் நுட்ப உதவியாளர் 1
12 ஓட்டுநர் 1
13 உதவி மின் பணியாளர் 1
மொத்தம் 38
பணியிடம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்

கல்வித்தகுதி:

தகுதி (அரசாணை நிலை எண்.114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை நாள் 03.09.2020ன்படி)

வெளித்துறை பணியிடங்கள்
இளநிலை உதவியாளர்

பதவி தரம் VI பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

சீட்டு விற்பனையாளர்

பதவி தரம் VI பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

திருவலகு

பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

காவலர்

பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பலவேலையாள்

பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

ஏவலர்

பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பெருக்குபவர்

பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

உள்துறை பணியிடங்கள்
உதவிப் பரிச்சாரகர்

பதவி தரம் XV தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயிலில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாலைகட்டி

பதவி தரம் XXX தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். தினசரி பூஜை மற்றும் உற்சவங்களுக்கு அம்மனுக்கு சாத்துபடி செய்ய மலர் மாலைகள் கட்ட தெரிந்திருக்க வேண்டும்.

உதவி பூசாரி (தொகுப்பூதியம்)

பதவி தரம் XXXIV தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். இந்து மத நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப பணியிடங்கள்
தொழில் நுட்ப உதவியாளர்

பதவி தரம் III சிவில் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

ஓட்டுநர்

பதவி தரம் VI எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர்

பதவி தரம் V அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன I.T.I. சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மின் உரிம வாரியத்தின் “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 15.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

வ எண் பதவியின் பெயர் சம்பள விகிதம்
வெளித்துறை பணியிடங்கள்
1 இளநிலை உதவியாளர் Level – 22
18500 – 58600
2 சீட்டு விற்பனையாளர் Level – 22
18500 – 58600
3 திருவலகு Level – 17
15900 – 50400
4 காவலர் Level – 17
15900 – 50400
5 பலவேலையாள் Level – 16
15700 – 50000
6 ஏவலர் Level – 10
10000 – 31500
7 பெருக்குபவர் Level – 10
10000 – 31500
உள்துறை பணியிடங்கள்
8 உதவிப் பரிச்சாரகர் Level – 10
10000 – 31500
9 மாலைகட்டி Level – 10
10000 – 31500
10 உதவி பூசாரி (தொகுப்பூதியம்) ரூ.7,950/-
(தொகுப்பூதியம்)
தொழில்நுட்ப பணியிடங்கள்
11 தொழில் நுட்ப உதவியாளர் Level – 27
20600 – 65500
12 ஓட்டுநர் Level – 22
18500 – 58600
13 உதவி மின் பணியாளர் Level – 18
16600 – 52400

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள், அனுபவ சான்று மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.




தேர்வு செய்யும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.



இதையும் பாருங்க: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 July 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16-07-2022
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலகர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், மின் அஞ்சல் – 641 305.

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்