You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 October 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி, சென்னை-26.

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்த நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியிட விபரங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு, ஊதியம், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை கீழே படித்து தெரிந்து
கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பணியிட விபரங்கள்:

1. இளநிலை உதவியாளர் – 5 பதவிகள்

2. தட்டச்சர் – 1 பதவி

3. ஓட்டுநர் – 1 பதவி

4. உதவி மின் பணியாளர் – 1 பதவி

5. நாதஸ்வரம் – 2 பதவிகள்

6. உதவி அர்ச்சகர் – 9 பதவிகள்

7. உதவி பரிச்சாரகம் – 2 பதவிகள்

8. உதவி சுயம்பாகம் – 1 பதவி

9. வேதபாராயணம் – 2 பதவிகள்

மொத்த காலிப்பணியிடங்கள்: 23 பதவிகள்

கல்வித்தகுதி:

1. இளநிலை உதவியாளர் 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

2. தட்டச்சர் 

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்
மற்றும்
2. அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்,
(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தல் முதுநிலை (அல்லது)
(ii)தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
(iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை

ஆனால் இனம் (i) குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை பெற்ற விண்ணப்பதாரர்கள் பெறாத நேர்வில் இனம் (ii) -ல் அல்லது இனம் (iii) தகுதிகளைக் பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம்.

கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. ஓட்டுநர்

8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஒட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் ஒராண்டு ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. உதவி மின் பணியாளர் 

அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. நாதஸ்வரம்

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்

யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

6. உதவி அர்ச்சகர் 

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்

யாதொரு சமயநிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடாசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

7. உதவி பரிச்சாரகம்

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்

கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

8. உதவி சுயம்பாகம் 

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்

கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

9. வேதபாராயணம்

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும்

யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.09.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




ஊதிய விகிதம்:

1. இளநிலை உதவியாளர் 

Pay Matrix 22 மாத சம்பளம் ரூபாய். 18,500 – 58,600

2. தட்டச்சர் 

Pay Matrix 22 மாத சம்பளம் ரூபாய். 18,500 – 58,600

3. ஓட்டுநர்

Pay Matrix 22 மாத சம்பளம் ரூபாய். 18,500 – 58,600

4. உதவி மின் பணியாளர் 

Pay Matrix 18 மாத சம்பளம் ரூபாய். 16,600 – 52,400

5. நாதஸ்வரம்

Pay Matrix 25 மாத சம்பளம் ரூபாய். 19,500 – 62,000

6. உதவி அர்ச்சகர் 

Pay Matrix 15 மாத சம்பளம் ரூபாய். 15,900 – 50,400

7. உதவி பரிச்சாரகம்

Pay Matrix 10 மாத சம்பளம் ரூபாய். 10,000 – 31,500

8. உதவி சுயம்பாகம் 

Pay Matrix 10 மாத சம்பளம் ரூபாய். 10,000 – 31,500

9. வேதபாராயணம்

Pay Matrix 16 மாத சம்பளம் ரூபாய். 15,700 – 50,000

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட ஜெராக்ஸ் நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ் எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ் நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் உடல் தகுதி சான்று பெற்று அதன் நகலுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் போது தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யும் முறை:

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து திருக்கோயிலுக்கு வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

பணியிடங்களுக்கு தனித்தனியாக நேர்முகத் தேர்வு / செய்முறை தேர்வு நடத்தப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.



விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04.10.2022. மாலை 5.00 மணி.
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம்  [PDF] இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26

தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்