You dont have javascript enabled! Please enable it!

HRCE – தஞ்சாவூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 01 Janaury 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்,
திருக்கருகாவூர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department – TNHRCE Thanjavur Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் மூ.மு.எண்.21451/2019/11/ நாள்: உத்திரவுப்படி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர், அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயிலுக்கு அர்ச்சகர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அர்ச்சகர் பணியிடத்திற்கு 11.11.2020 இதே நாளிதழ் விளம்பரப்படி ஏற்கனவே செய்யப்பட்ட விண்ணப்பம் கோரும் அறிவிப்பு நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் தற்சமயம் புதியதாக விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. அர்ச்சகர்

2. பரிச்சாரகர்

கல்வித் தகுதி:

1. அர்ச்சகர்

i) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) சிவ ஆகம தகுதிச் சான்று இருக்க வேண்டும்.

iii) திருக்கோயில்களில் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஆகம பயிற்சி நிறுவனத்தில் 3 வருட பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

2. பரிச்சாரகர்

i) தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ii) நைவேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

iii) சைவ திருக்கோயில் பூசை முறை பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-01-2022 -ன் படி பல்வேறு பிரிவுகளுக்கான குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு:

i) UR/EWS பிரிவினர்கள் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) SC/ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 39 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. அர்ச்சகர்

7-வது ஊதியக்குழு ஊதியம் 4700 – 7800 +1250 நிலை-15 ஆரம்ப சம்பளம் ரூ. 15,300 வழங்கப்படும்.

2. பரிச்சாரகர்

7-வது ஊதியக்குழு ஊதியம் 3900 – 7400 +1250 நிலை-14 ஆரம்ப சம்பளம் ரூ. 13,200 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை அருள்மிகு முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.




தேர்வு செய்யப்படும் முறை:

உரிய தகுதிகள் பெற்றுள்ள மற்றும் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைத்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்வு தேர்வுக் குழுவினரால் குறிப்பிடப்படும் தேதியில், நேரத்தில் மற்றும் இடத்தில் நடத்தப்படும். (மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த செலவில் வரவேண்டும்)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்

திருக்கோயில் இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்,
திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614302.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்