You dont have javascript enabled! Please enable it!

HRCE – நாமக்கல் மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், நாமக்கல் நகர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department – TNHRCE Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. உதவி சுயம்பாகம் (உள்துறை)

2. இளநிலை உதவியாளர் (வெளித் துறை)

3. தட்டச்சர் (வெளித் துறை)

4. டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை)

கல்வித் தகுதி:

1. உதவி சுயம்பாகம் (உள்துறை)

i) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ii) இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. இளநிலை உதவியாளர் (வெளித் துறை)

SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

3. தட்டச்சர் (வெளித் துறை)

i) SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ii) அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் i) தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலை அல்லது ii) தமிழில் உயர்நிலை, ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது (iii) தமிழில் கீழ்நிலை, ஆங்கிலத்தில் உயர்நிலையில் தட்டச்சர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) அரசால் அங்கீகரிக்கப்பட்ட Computer Application and Office Automation அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை)

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

1. உதவி சுயம்பாகம் (உள்துறை)

Pay Matrix 10, Level-1 -ன் படி அடிப்படை சம்பளமாக ரூ. 10,000 வழங்கப்படும். அதிகப்பட்சம் ரூ. 31,500 வரை வழங்கப்படும்.

2. இளநிலை உதவியாளர் (வெளித் துறை)

Pay Matrix 22, Level-1 -ன் படி அடிப்படை சம்பளமாக ரூ. 18,500 வழங்கப்படும். அதிகப்பட்சம் ரூ. 58,600 வரை வழங்கப்படும்.

3. தட்டச்சர் (வெளித் துறை)

Pay Matrix 22, Level-1 -ன் படி அடிப்படை சம்பளமாக ரூ. 18,500 வழங்கப்படும். அதிகப்பட்சம் ரூ. 58,600 வரை வழங்கப்படும்.

4. டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை)

Pay Matrix 12, Level-1 -ன் படி அடிப்படை சம்பளமாக ரூ. 11,600 வழங்கப்படும். அதிகப்பட்சம் ரூ. 36,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை நமது இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் சுய சான்றொப்பம் இட்டு (Sel Attested Xerox copies only) அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் “——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்

திருக்கோயில் இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form)  இங்கே கிளிக் செய்யுங்கள்

 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் – 637001



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்