You dont have javascript enabled! Please enable it!

HRCE – காஞ்சிபுரம் மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department – TNHRCE Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்டவிதிகளுக்கு உட்பட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. தலைமை ஆசிரியர்

2. ஆகம ஆசிரியர்

3. எழுத்தர்

4. சமையலர்

5. சமையல் உதவியாளர்

கல்வித் தகுதி:

1. தலைமை ஆசிரியர்

i) தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

ii) இந்து சமய இலக்கியங்களிலும், தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

iii) பல்கலைக் கழகம் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் காலம் பணியாற்றிய அனுபவம் தேவை.

2. ஆகம ஆசிரியர்

ஏற்கனவே நடைபெற்று வரும் வேதாகம பாடசாலைகளில் சைவ ஆகமங்களை நான்கு ஆண்டுகளுக்கும் குறையாமல் பயின்று தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாழ்வியல் சடங்குகள் பற்றிய போதிய கற்றறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. எழுத்தர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

4. சமையலர்

i) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ii) 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. சமையல் உதவியாளர்

i) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

11) உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், 01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

1. தலைமை ஆசிரியர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 35,000/- வழங்கப்படும்.

2. ஆகம ஆசிரியர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 30,000/- வழங்கப்படும்.

3. எழுத்தர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000/- வழங்கப்படும்.

4. சமையலர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12,000/- வழங்கப்படும்.

5. சமையல் உதவியாளர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை திருக்கோயில் அலுவலத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பத்தை மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் சுய சான்றொப்பம் இட்டு (Sel Attested Xerox copies only) அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் “——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

திருக்கோயில் இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்-602 105, காஞ்சிபுரம் மாவட்டம்.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்