You dont have javascript enabled! Please enable it!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள் 2021

Hindustan Petroleum Corporation Limited (HPCL) Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட். சுருக்கமாக ஹச்பி (ஹெச்பிசிஎல்) எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

Arasuvelai - Posts | Facebook

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. திட்ட தொடர்பாளர் (Project Associate)

2. ஆராய்ச்சி துணையாளர் (Research Associate)

மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. திட்ட தொடர்பாளர் (Project Associate)

i) அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் BSc/ MSc பட்டம்/முதுகலை பட்டத்தை Chemistry, Chemistry -Material Science, Microbiology/ Biosciences/ Biotechnology ஆகிய பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

ii) அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் அல்லது தொழில்நுட்ப நிறுவனத்தில் Diploma/PG Diploma பட்டயம்/முதுகலை பட்டயத்தை Chemical Engineering/Chemical Technology/Petroleum Refining, Mechanical Engineering/ Automobile Engineering ஆகிய பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) General, OBC-NC & EWS பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST/PWD பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

2. ஆராய்ச்சி துணையாளர் (Research Associate)

i) Ph.D., – Chemistry ஆய்வு பட்டத்தை Ph.D. in Polymers/Polyolefin/Petrochemicals, Ph.D. in Battery Research, Ph.D. in Membrane Separation and Adsorptive Separation, Ph.D. in Catalysis, Ph.D. in Materials / Nano-materials, h.D. in Analytical and Organic Chemistry ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

ii) Ph.D., – BioScience/Microbiology/Biotechnology ஆய்வு பட்டத்தை Ph.D., in Bio-Sciences /Microbiology/Biotechnology ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

iii) Ph.D. – Engineering ஆய்வு பட்டத்தை PhD. in Chemical engineering, Ph.D., in Bio-Sciences /Microbiology/Biotechnology, PhD. in Combustion & Emission Engineering / Automobile Engineering
/Thermal Engineering / Mechanical Engineering, PhD. in Metallurgy with Specialization in Corrosion Studies ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

iv) M.Tech முதுகலை இன்ஜினியரிங் பட்டத்தை Chemical Engineering, Metallurgy with specialization in corrosion studies, Mechanical Engineering, Combustion & Emission Engineering/ Automobile Engineering, Thermal Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v) General, OBC-NC & EWS பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST/PWD பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. திட்ட தொடர்பாளர் (Project Associate)

11-10-2021-ன் படி அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் OBC (Non Creamy layer) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அரசு உத்தரவுகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

2. ஆராய்ச்சி துணையாளர் (Research Associate)

11-10-2021-ன் படி அதிகப்பட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் OBC (Non Creamy layer) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அரசு உத்தரவுகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.





சம்பள விகிதம்:

1. திட்ட தொடர்பாளர் (Project Associate)

அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர ஊக்கத்தொகை குறைந்தப்பட்சம் ரூ. 40,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000/- தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து வழங்கப்படும். இதில் HRA, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவை அடங்கும்.

2. ஆராய்ச்சி துணையாளர் (Research Associate)

அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர ஊக்கத்தொகை குறைந்தப்பட்சம் ரூ. 65,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 85,000/- தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து வழங்கப்படும். இதில் HRA, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவை அடங்கும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2021

HPCL -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

1. திட்ட தொடர்பாளர் (Project Associate) அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. ஆராய்ச்சி துணையாளர் (Research Associate) அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்