You dont have javascript enabled! Please enable it!

மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி? முழு விவரம்

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

How to get an education loan from the Central Government? Full details

கல்விக் கடன்

வித்யா லட்சுமி இணையத்தளம் என்பது மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெற மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும். இந்த இணையத்தளத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க இயலும்.




விண்ணப்பம் செய்வது எவ்வாறு?

  • படிநிலை – 1

    : இணையத்தளத்தில் பதிவு செய்து உள்நுழையவும்.

  • படிநிலை – 2

    : தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.

  • படிநிலை – 3

    : தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப வங்கிகளுக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.




நினைவில் கொள்க:

  • வித்யா லட்சுமி இணையத்தளத்தின் வாயிலாக அதிகபட்சம் மூன்று வங்கிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • வித்யா லட்சுமி இணையத்தளத்தின் வாயிலாகவே உங்கள் கடன் விண்ணப்பத்தைக் கண்காணிக்கலாம்.

ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் விண்ணப்பதாரரின் கல்விக் கடன் வங்கியால் நேரடியாக வழங்கப்படும்.



பதிவு செய்வது எவ்வாறு?

(1). பெயர் – பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ளவாறு அல்லது உங்கள் கடன் விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலில் உள்ளவாறு.

(2). கைபேசி எண் – உங்கள் கடனின் நிலையை அறியக்கூடிய வகையில் சரியான கைபேசி எண்ணை உள்ளிடவும்.

(3). மின்னஞ்சல் முகவரி – சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அனைத்து தகவல்களும் இந்த மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவே அனுப்பப்படும்.





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்