You dont have javascript enabled! Please enable it!

சென்னை/மதுரை உயர்நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர்கள் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு வழக்காடல் துறை, அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை-600 104. அறிக்கை எண்.01/2022. நாள் 20.05.2022 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

TN Litigation Department Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர்கள் காலி பணி இடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்களுக்கு கீழ்கண்ட மாதிரி விண்ணப்பத்நினைப் பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் இட்டு இணைத்து அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையானது, இத்துறை அறிக்கை எண்.01/2021 நாள் 10.02.2021 “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளிதழ் மற்றும் “தினமணி” தமிழ் நாளிதழில் வெளியான அறிக்கைக்கு கூடுதலாக எண்.01/2021-படி விண்ணப்பித்த நபர்கள் இந்த அறிக்கைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்கள்

காலி பணியிடங்கள்: 27 பதவிகள் இந்த பணியிடங்கள் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்)

பணி புரியும் இடங்கள்: சென்னை மற்றும் மதுரை

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (முன்னாள் படைவீரர்களுக்கு
இக்கல்வித் தகுதி வலியுறுத்தப்படமாட்டாது), நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

01.07;2021 அன்று 18 வயது நிரம்பியலராக இருக்க வேண்டும் – பொது வகுப்பினருக்கு 32க்கு மிகாமலும், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 34 வயது மிகாமலும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

அரசு ஊதிய விகிதம் லெவல் 1 ன் படி 15,700 – 50,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம். மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை புதியதாக A4 சைஸ் தாளில் புதியதாக உருவாக்கி கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி விண்ணப்ப படிவம் மட்டுமே.

அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச் சான்றிதழ்/ கல்வி சான்றிதழ்/ சாதி சான்றிதழ் முன்னுரிமை தகுதி சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் (Attested by the Gazetted Officer) இட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூ. 50/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 17.06.2022 மாலை 5.45 மணி வரை.

கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. அஞ்சல் துறை மற்றும் பிற காரணங்களால் விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104

உயர்நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் (High Court Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

உயர்நீதிமன்ற அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ மாதிரி விண்ணப்பத்தினை (Official Application Format) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்