அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
Health and Family Welfare Department – HFWD Recruitment Notification 2021
Government Primary Health Centers Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்டவாறு ஒப்பளிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. உளவியலாளர்
2. சமூக தொழிலாளி
3. மருத்துவமனை தொழிலாளி
4. பாதுகாவலர்
5. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator)
6. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
7. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)
8. பல் மருத்துவ உதவியாளர்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. உளவியலாளர்
M.Sc (Psy) அல்லது M.Phil Clinical Psy அல்லது M.A. அல்லது M.Sc. Psy. முடித்திருக்க வேண்டும். மற்றும் NIMHAN போன்ற நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சமூக தொழிலாளி
M.A. Social work (Medical அல்லது Psychiatry) அல்லது Master of Social Work (Medical/Psychiatry) முடித்திருக்க வேண்டும். ஏதேனும் நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
3. மருத்துவமனை தொழிலாளி
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. பாதுகாவலர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator)
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து MCA அல்லது BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் BE (Bio Medical Eng.), MSc (Bio Medical Engineering), MSc, MLT ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட (Medical Lab Services) துறையில் ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
6. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
Dental அல்லது Ayush அல்லது Nursing அல்லது Social Science அல்லது Life Science பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பின்பு Hospital Administration அல்லது Public Health அல்லது Health Management பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுகாதார நிர்வாகத்தில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
7. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)
குளிர்பதன ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்கில் (MRAC) ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஏர் கண்டிஷனிங் கையாளுதலில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
8. பல் மருத்துவ உதவியாளர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் பல் சுகாதாரத்தில் உதவிய அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
1. உளவியலாளர்
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. சமூக தொழிலாளி
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. மருத்துவமனை தொழிலாளி
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. பாதுகாவலர்
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator)
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
6. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8. பல் மருத்துவ உதவியாளர்
40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. உளவியலாளர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000/- வழங்கப்படும்.
2. சமூக தொழிலாளி
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 18,000/- வழங்கப்படும்.
3. மருத்துவமனை தொழிலாளி
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 5,000/- வழங்கப்படும்.
4. பாதுகாவலர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 6,300/- வழங்கப்படும்.
5. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 16,500 வழங்கப்படும்.
6. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.
7. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 20,000 வழங்கப்படும்.
8. பல் மருத்துவ உதவியாளர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,395/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டு லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.
தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் / விரைவஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
தருமபுரி மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-11-2021 மாலை 5 மணி
16.11.2021 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிருவாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வுச்சங்கம் (District Health Society)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
தருமபுரி மாவட்டம் – 636705
தருமபுரி மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!