தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Medical Recruitment Board (MRB), Chennai Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer)
மொத்த பணியிடங்கள்: 119 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து B.Sc. அல்லது B.Tech. இளங்கலை பட்டத்தை Food Technology அல்லது Dairy Technology அல்லது Home Science அல்லது Biotechnology அல்லது Oil Technology அல்லது Agriculture Science அல்லது Veterinary Science அல்லது Biochemistry அல்லது Microbiology அல்லது medicine படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
M.Sc. Chemistry முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
உணவு பாதுகாப்பு அதிகாரியாக ஆக ஒரு விண்ணப்பதாரரின் வயது தேர்வு ஆண்டில் 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினர் (SC / ST / OBC / PWD / ExSM) விண்ணப்பதாரர்கள் அரசு வகுத்த விதிகளின்படி உயர் வயது வரம்பில் தளர்வு பெறுகிறார்கள்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 35,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,13,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் ரூ. 350/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைவரும் ரூ. 700/- செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதியின் மதிப்பெண்கள், ஆரம்ப எழுத்துத் தேர்வு (Preliminary Written Exam) (Objective Type and Multiple Choice), முக்கிய எழுத்துத் தேர்வு (Conventional Type) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (தனிநபர் தேர்வு) ஆகியவற்றில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதன்மை எழுத்துத் தேர்வில், வேளாண்மை, வேதியியல், பொறியியல், வனவியல், தோட்டக்கலை, இயற்பியல், கால்நடை அறிவியல், தாவரவியல், கணினி பயன்பாட்டு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், கணிதம், புள்ளியியல், விலங்கியல் போன்ற விருப்பப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
28-10-2021 நீட்டிக்கப்பட்ட தேதி: 05-11-2021
TN MRB – யின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு (Official Corrigendum Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!