நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
ஈரோடு மாவட்டம் மாவட்ட நலச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில்
பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
3. மாவட்ட பொது சுகாதார ஆய்வக மேற்பார்வையாளர் – DPHL
4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)
5. கணக்காளர் (Accountant)
6. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)
7. வாகனம் ஓட்டுபவர் (Driver)
மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்
கல்வித்தகுதி:
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)
i) 10th + 12th மற்றும் (அறிவியல்) இளநிலைப்பட்டம்.
ii) மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயம்.
iii) நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்.
iv) 2 மாத கணினி (MSOffice) சான்றிதழ்.
v) குறைந்தப்பட்சம் சுகாதார துறையில் ஒரு வருட பணி அனுபவம்.
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
அடிப்படை தகுதி:
i) +2 வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் படிப்பு B.Sc (MLT) அல்லது சான்றிதழ் (DMLT) இருக்க வேண்டும்.
முன்னுரிமை தகுதி:
காசநோய் பரிசோதனையில் ஒரு வருட முன் அனுபவம் விரும்பப்படுகிறது.
3. மாவட்ட பொது சுகாதார ஆய்வக மேற்பார்வையாளர் – DPHL
i) பட்ட படிப்பு – அறிவியல்.
ii) (10+2) மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர் பட்டம் அல்லது பட்டயம்
iii) நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்.
iv) 2 மாத கனிணி பயிற்சி சான்றிதழ் (MSOffice) சான்றிதழ்.
4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)
12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பல்நோக்கு சுகாதாரம் (MPW) அல்லது LHV அல்லது ANM அல்லது Health worker அல்லது சுகாதாரக் கல்வி அல்லது ஆலோசகர் படிப்பு காசநோய் சுகாதார பார்வையாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கணினி பயிற்சி சான்றிதழ் (குறைந்த பட்சம் இரண்டு மாதம் பயிற்சி) இருக்க வேண்டும்.
5. கணக்காளர் (Accountant)
i) வணிகவியல் பட்டதாரி.
ii) கணக்குகளை பராமரித்தலில் இரண்டு வருட அனுபவம்.
iii) கணக்கியல் மென்பொருள் உடன் வேலை செய்வதில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்.
6. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)
i) (10+2) மற்றும் கணிப்பொறிப் பயன்பாடு பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையான DOEACC அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது பட்டயம்
ii) தட்டச்சு வேகம் 40WPM தமிழ் மற்றும் ஆங்கிலம்
iii) MS office மற்றும் எளிய புள்ளியல் package
7. வாகனம் ஓட்டுபவர் (Driver)
i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii) நிரந்தர ஓட்டுநர் உரிமம்.
வயது வரம்பு:
வயது வரம்பு 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.
3. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians )
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 19,000 வழங்கப்படும்.
4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.
5. கணக்காளர் (Accountant)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.
6. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 12,000 வழங்கப்படும்.
7. வாகனம் ஓட்டுபவர் (Driver)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த காலி பணியிடங்கள் வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும.
சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிக்கப்படுவதும் NTEPயின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்கள் (Bio Data), கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம்: – ATTESTED XEROX COPIES) ரூ.6/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4X10 கவருடன் இணைத்து சாப்பிக்கப்பட வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 16-03-2022
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்),
எண்: 38, மாவட்ட காசநோய் மையம்,
அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
ஈரோடு மாவட்டம் – 6380009
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இஙகே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!