You dont have javascript enabled! Please enable it!

ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Erode District social welfare Department Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. தகவல் தொழில்நுட்ப ஊழியர் – 1 பதவி

2. பன்முக உதவியாளர் (Multi-purpose Helper) – 1 பதவி

3. பாதுகாப்பாளர் (Security Guard) – 1 பதவி

காலி பணியிடங்கள்: 3 பதவிகள்

கல்வித் தகுதி:

1. தகவல் தொழில்நுட்ப ஊழியர்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரச்சனைகளில் பணிபுரிந்த அனுபவம் கூடுதலாகும். கணினி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தது 3 ஆண்டுகள்

2. பன்முக உதவியாளர் (Multi-purpose Helper)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

3. பாதுகாப்பாளர் (Security Guard)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

1. தகவல் தொழில்நுட்ப ஊழியர்

மாத ஊதியம் ரூ. 18,000/- ஆகும்.

2. பன்முக உதவியாளர் (Multi-purpose Helper)

மாத ஊதியம் ரூ. 6400/- ஆகும்.

3. பாதுகாப்பாளர் (Security Guard)

மாத ஊதியம் ரூ. 10,000/- ஆகும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விரும்பும் பதவிகளுக்கு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம்,
6வது தளம்,
ஈரோடு 638011.
தொலைபேசி எண்: 0424-2261405

 விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (District Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (District Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்