வேலூர் மாவட்டம் “சகி” பெண்கள் வள மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Vellore District One Stop Center – OSC Recruitment Notification 2022
Saki Women’s Resource Centre Vellore District Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய (ONE STOP CENTRE)- என்ற திட்டத்திற்கு வழக்கு பணியாளர் 1 & 2 (Case Worker 1&2) (24X7), ஓட்டுநர் பாதுகாவலர் (Driver/Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. வழக்கு பணியாளர் (Case Worker)
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
3. பாதுகாவலர் & டிரைவர் (Security Guard & Driver)
கல்வித்தகுதி:
1. வழக்கு பணியாளர் (Case Worker)
சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலைப் பட்டம் (Master’s of Social Work, Counselling Psycology or Development Management) மற்றும் 2 வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
3. பாதுகாவலர் & டிரைவர் (Security Guard & Driver)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
31-12-2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
1. வழக்கு பணியாளர் (Case Worker)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
2. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 6,400/- வழங்கப்படும்.
3. பாதுகாவலர் & டிரைவர் (Security Guard & Driver)
தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 10,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து புகைப்படம் ஒட்டி நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (xerox) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04-01-2022 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
4வது மாடி, ‘B’ பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி, வேலூர்.
வேலூர் மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலூர் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்