மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
District Health Society Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் / வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட தர ஆலோசகர்
2. ஏஎன்எம்
3. குளிர்சாதன மெக்கானிக்
4. ஐடி ஒருங்கிணைப்பாளர்
5. பல் உதவியாளர்
6. பிசியோதெரபிஸ்ட்
7. மருந்தாளர்
8. கண் உதவியாளர்
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. மாவட்ட தர ஆலோசகர்
Dental / AYUSH / Nursing / Social Science / Life Science Graduates with Master Degree in Hospital Administration / Public Health / Health Management (Full Time or Equivalent) with 2 years Experience in Health Administration.
Desirable Training / Experience on NABH / ISO9001-2008 / Six Sigma / Lean / Kaizen Would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.
2. ஏஎன்எம்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஏஎன்எம் பள்ளியிலிருந்து ஏஎன்எம் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சி கவுன்சில் வழங்கிய பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும்.
3. குளிர்சாதன மெக்கானிக்
குளிர்பதனத்தில் மெக்கானிக்கில் ஐடிஐ சான்றிதழ் மற்றும் ஏர் கண்டிஷனிங் (எம்ஆர்ஏசி) பெற்றிருக்க வேண்டும்.
குளிர்சாதன வசதி மற்றும் ஏர் கண்டிஷனிங் கையாளுவதில் 1 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
4. ஐடி ஒருங்கிணைப்பாளர்
எம்சிஏ/பி.டெக் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பல் உதவியாளர்
10 வது தேர்ச்சி மற்றும் பல் சுகாதாரத்தில் உதவுவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
6. பிசியோதெரபிஸ்ட்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிசியோதெரபி (பிபிடி) முடித்திருக்க வேண்டும்.
7. மருந்தாளர்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட மருந்தியல் டிப்ளமோ சான்றிதழ் மற்றும் மருந்தக கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
8. கண் உதவியாளர்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆப்டோமெட்ரியில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. மாவட்ட தர ஆலோசகர்
45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. ஏஎன்எம்
3. குளிர்சாதன மெக்கானிக்
4. ஐடி ஒருங்கிணைப்பாளர்
5. பல் உதவியாளர்
6. பிசியோதெரபிஸ்ட்
7. மருந்தாளர்
8. கண் உதவியாளர்
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
மேற்கண்ட பதவிகள் அனைத்திற்கும் குறைந்தப்பட்சம் 20 வயது முதல் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. மாவட்ட தர ஆலோசகர்
மாத ஊதியம் ரூ. 40,000
2. ஏஎன்எம்
மாத ஊதியம் ரூ. 11,000
3. குளிர்சாதன மெக்கானிக்
மாத ஊதியம் ரூ. 20,000
4. ஐடி ஒருங்கிணைப்பாளர்
மாத ஊதியம் ரூ. 16,500
5. பல் உதவியாளர்
மாத ஊதியம் ரூ. 10,000
6. பிசியோதெரபிஸ்ட்
மாத ஊதியம் ரூ. 10,000
7. மருந்தாளர்
மாத ஊதியம் ரூ. 10,000
8. கண் உதவியாளர்
மாத ஊதியம் ரூ. 10,500
9. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
மாத ஊதியம் ரூ. 5,121
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா, தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
நாமக்கல் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2021 மாலை 5 மணி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் / Email ID: dphnmk@nic.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்,
(District Health Society) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637 003
நாமக்கல் மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!