You dont have javascript enabled! Please enable it!

DPH – தமிழ்நாடு அரசு தேசிய சுகாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தேசிய சுகாதார இயக்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்டவாறு ஒப்பளிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை | உதவியாளர் - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. CEMONC பாதுகாப்பு காவலர் (பல்நோக்கு மருத்துவமனை சுகாதார பணியாளர்)

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த தொகுப்பூதியமாக அதிகப்பட்சம் ரூ. 8,500 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா மற்றும் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் பதிவஞ்சல் / விரைவஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-12-2021 மாலை 5 மணி

02.12.2021 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கெளரவ செயலாளர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பழைய அரசு மருத்துவமனை , செங்கம் ரோடு திருவண்ணாமலை – 606 603

திருவண்ணாமலை மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்