You dont have javascript enabled! Please enable it!

DPH – தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

District Health Society Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் – தேனி மாவட்டம். அரசு ஆணை எண்.486, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (EAP II-1) நாள் : 16.11.2020 மற்றும் குழும இயக்குநர், மாநில நலவாழ்வு சங்கம், சென்னை அவர்களின் கடித எண்.7404/P9/ NHM | 2016, நாள் : 16.11.2021-ன் படி தேனி மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள District Quality Consultant (On Contract for 11 Months) பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

கல்வித்தகுதி:

Dental அல்லது Ayush அல்லது Nursing அல்லது Social Science அல்லது Life Science பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பின்பு Hospital Administration அல்லது Public Health அல்லது Health Management பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுகாதார நிர்வாகத்தில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு (01.07.2021 அன்று) 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.




மாத ஊதியம்:
மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா, தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன. தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

தேனி மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-11-2021 மாலை 5:45 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், பிளாக் எண்.1, பல்துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் பின்புறம், தேனி-625 531.

தேனி மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்