You dont have javascript enabled! Please enable it!

DSD – கள்ளக்குறிச்சி மாவட்டம் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

District Child Protection Unit, Kallakurichi District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்காணும் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி/ தபால்





பணியிட விபரங்கள்:

1. பாதுகாப்பு அலுவலர்கள் (நிறுவனம் சார்ந்து மற்றும் நிறுவனம் சாரா)

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

3. ஆற்றுப்படுத்துநர்

4. சமூகப்பணியாளர்கள்

5. கணக்காளர்

6. தகவல் பகுப்பாளர்

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

8. புறத்தொடர்பு பணியாளர்கள்

கல்வித்தகுதி:

1. பாதுகாப்பு அலுவலர்கள் (நிறுவனம் சார்ந்து மற்றும் நிறுவனம் சாரா)

i) பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி

ii) குற்றவியல்/ கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகப்பணி/ சமூகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

iii) தொழில், கல்வி, சமூக நலம், குழந்தை நலம், ஆகியவற்றில் எதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

i) பி.எல் (B.L)/ எல்எல்பி (LLB) வழக்கமான முறையில் சட்டம் பயின்றிருத்தல் வேண்டும்.

ii) குழந்தை நலன், சமூகநலன், தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலியவற்றில் ஒரு வருட கள அனுபவம் இருத்தல் வேண்டும்.

3. ஆற்றுப்படுத்துநர்

i) பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி

ii) உளவியல்/ சமூகப்பணி/ சமூகவியல்களில்/ வழிகாட்டுதல்/ ஆற்றுப்படுத்துதல், மருத்துவம், மனநலம் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

iii) குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

4. சமூகப்பணியாளர்கள்

i) பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி

ii) உளவியல்/ சமூகப்பணி/ சமூகவியல்களில்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம்
பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

iii) குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

5. கணக்காளர்

i) பி.காம்/ எம்.காம்.

ii) ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

6. தகவல் பகுப்பாளர்

i) பி.ஏ/ பிசிஏ/ பிஎஸ்சி, புள்ளியல்/ பிஎஸ்சி, கணக்கு

ii) ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

i) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப் பயிற்சி (DCA)

iii) கணிணி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. புறத்தொடர்பு பணியாளர்கள்

i) பத்தாம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்,

iii) குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.





சம்பள விகிதம்:

1. பாதுகாப்பு அலுவலர்கள் (நிறுவனம் சார்ந்து மற்றும் நிறுவனம் சாரா)

மாத தொகுப்பூதியமாக ரூ. 21,000 வழங்கப்படும்

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

மாத தொகுப்பூதியமாக ரூ. 21,000 வழங்கப்படும்

3. ஆற்றுப்படுத்துநர்

மாத தொகுப்பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும்

4. சமூகப்பணியாளர்கள்

மாத தொகுப்பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும்

5. கணக்காளர்

மாத தொகுப்பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும்

6. தகவல் பகுப்பாளர்

மாத தொகுப்பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும்

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்

8. புறத்தொடர்பு பணியாளர்கள்

மாத தொகுப்பூதியமாக ரூ. 8,000 வழங்கப்படும்

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-01-2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்: 156, சாரதாம்பாள் வீதி,
நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி,
விழுப்புரம் – 605 401.
தொலைபேசி எண்: 04146 – 290659

கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Dist Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுஙகள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்