மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
JUDICIAL RECRUITMENT.CELL, HIGH COURT, MADRAS
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழகத்தில் உள்ள விருதுநகர் நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு (i) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff), மற்றும் (ii) இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) பதவிகளுக்கான நேரடித் தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பதவியின் பெயர், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
1. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) – 11 பதவிகள்
2. இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) – 19 பதவிகள்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 30 பதவிகள்
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி, அதாவது, எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லுாரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது (01.07.2022 அன்று உள்ளபடி):
விண்ணப்பதாரர்கள், 01.07.2004க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01.07.2022 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
i) ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட வகுப்பினர் பழங்குடியினர் அனைத்து (அருந்ததியர்), மற்றும் வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்
அதிகபட்ச வயது விண்ணப்பதாரர் 37 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது).
01.07.1985 தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்க கூடாது.
ii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், இசுலாமியர் பிற்படுத்தப்பட்ட அல்லாத வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் வகுப்பினர் (இசுலாமியர்கள்)
அதிகபட்ச வயது விண்ணப்பதாரர் 34 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது)
01.07.1988 தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்க கூடாது.
iii) மற்றவர்கள்/ (அதாவது ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மிகவும் மற்றும் வகுப்பினர் தவிர வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட (இசுலாமியர்கள்)
அதிகபட்ச வயது விண்ணப்பதாரர் 32 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது)
01.07.1990 தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்க கூடாது.
சம்பள விகிதம்:
1. முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff)
ஊதிய நிலை 7 – சம்பள ஏற்றமுறை ரூ. 19,000 – ரூ. 69,900/-
2. இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)
ஊதிய நிலை 7 – சம்பள ஏற்றமுறை ரூ. 19,000 – ரூ. 69,900/-
விண்ணப்ப கட்டணம்:
i) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்)/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர்/மற்றவர்கள்.
ஒவ்வொரு பதவிக்கும் ரூ.550/-
ii) ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்), பழங்குடியினர் (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்டண விலக்கு பொருந்தும்)
முழு விலக்கு
iii) மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்
a) மாற்றுத்திறனாளிகள், 40 சதவிகிதத்திற்கு குறைவாக ஊனம் கொண்டிருக்கக்கூடாது. (அனுமதிக்கப்பட்ட ஊனங்கள்)
b) ஆதரவற்ற விதவைகள் பொறுத்தவரை, “ஆதரவற்ற விதவை சான்றிதழினை” வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியர்/உதவி ஆட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
முழு விலக்கு
தேர்வு செய்யப்படும் முறை:
i) OMR முறையில் எழுத்துத்தேர்வின் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பொது எழுத்துத்தேர்வு:
ii) எழுத்துத்தேர்வு பகுதி-அ (Part – A) மற்றும் பகுதி-ஆ (Part-B) என இரண்டு பகுதிகளைக் கொண்டது.
குறிப்பு:
i) பகுதி- ‘அ’ ல் உள்ள கேள்விகள் தமிழில் கேட்கப்படும்.
*மாற்றுத்திறனாளிகளுக்கு, கேள்விகள் அவர்களின் விருப்பப்படி தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமைக்கப்படும். பகுதி ‘ஆ’ (Part – B)ல் உள்ள கேள்விகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இருமொழிகளிலும் அமைக்கப்படும்.
ii) விண்ணப்பதாரர்கள் பகுதி ‘அ’ (Part-A) இல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களான 40% (அதாவது 20 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே பகுதி ‘ஆ’ (Part- B) மதிப்பீடு செய்யப்படும்.
எழுத்துத் தேர்வின் பகுதி- அ (Part-A) மற்றும் பகுதி- ஆ (Part-B) ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
(iii) பகுதி ‘அ’ (Part-A) மற்றும் பகுதி ‘ஆ’ (Part-B) இல் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் இடஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுவர்.
இடஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி அல்லது மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர். இருப்பினும், ஒவ்வொரு இட ஒதுக்கீடு குழுவிலும், ஒரே மதிப்பெண்ணைப் பெற்ற அனைத்து தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
இறுதித் தேர்வுப் பட்டியல், இடஒதுக்கீட்டு விதி மற்றும் தகுதி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு இணைய முகப்பில் (Madras High Court Recruitment Portal) பதிவேற்றம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.mhc.tn.gov.in என்ற முகவரியில் சமர்ப்பிக்கப்படும் இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வேறெந்த முறையிலாவது, அதாவது தபால், கூரியர், பதிவுத் தபால், மின்னஞ்சல் போன்றவை மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது சம்மந்தமாக விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் எந்த ஒரு கடிதப் பரிமாற்றமும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர்கள் கணினி அல்லது மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அலைபேசி (Cellular Phone) அல்லது வரைபட்டிகை (Tab)-ன் மூலம் விண்ணப்பிக்க இயலாது. ஏனெனில் விண்ணப்பப் படிவம் கணினி மற்றும் மடிக்கணினியின் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய ஏதுவாக இருக்கும்.
அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களும் உட்பட) (கட்டணம் விலக்களிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.60/-ஐ [(அறுபது ரூபாய் மட்டும்) + பொருந்தக்கூடிய கட்டணங்களை] செலுத்தி, மாவட்ட வாரியான நீதித்துறை அறிவிக்கைகளுக்கு தங்களது அடிப்படை விவரங்களை பதிவு செய்வது கட்டாயமாகும். அதன்பின் இந்த அறிவிக்கையில் உள்ள பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்தவேண்டும். இருப்பினும் விலக்களிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய, பதிவு கட்டணம் செலுத்த, விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 22-08-2022
(இணைய தளம் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இணையதளம்
அல்லாத முறைகளில் கட்டணம் செலுத்த அனுமதி இல்லை)
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்