You dont have javascript enabled! Please enable it!

கரூர் மாவட்டம் நீதிமன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 30 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

முதன்மை நீதிமன்றம் கரூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் 2022

Tamil Nadu District Court Karur Recruitment 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு (Self attestation), இணைத்து பதிவு தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III)

மொத்த பணியிடங்கள்: 8 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பில் (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2022 ம் தேதியன்று வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்து இருக்கவேண்டும்.

அதிகப்பட்ச வயது வரம்பு

பிரிவுகள் அதிகப்பட்ச வயது வரம்பு
O.C B.C / M.B.C SC / ST
பொது 30 32 35
மாற்றுத் திறனாளி (40% ஊனம்) 40 42 45
முன்னாள் இரானுவத்தினர் இல்லை இல்லை இல்லை
ஆதரவற்ற விதவைகள் இல்லை இல்லை இல்லை

(வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள் மற்றும் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்)





சம்பள விகிதம்:

1. சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III)

மாத ஊதியமாக Level 10 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 20,600 முதல் அதிகப்பட்சம் ரூ. 65,500/- வரை வழங்கப்படும். மற்றும் இதரப்படிகள் கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

(அ) எழுத்து தேர்வு முறை:

எழுத்து தேர்வில் 35 கேள்விகள் (கொள்குறி வகை) கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். கால அளவு 60 நிமிடங்கள் (One Hour).

வினாத்தாள் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது:

பகுதி அ : பொது அறிவு
பகுதி ஆ (i) : பொது தமிழ்

(ஆ) செய்முறை தேர்வு (15 மதிப்பெண்கள்)

சுருக்கெழுத்து செய்முறை தேர்வு நடைபெறும், அதில் சுருக்கெழுத்தில் எடுக்கப்பட்டதை கணிணியில் தட்டச்சு செய்து காட்ட வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு, இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிபெற்ற விண்ணப்பதார்களைப் பொறுத்து 1:5 அல்லது புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி, அவர்களது முடிவின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

→ நேர்முகத் தேர்வின் நோக்கமே விண்ணப்பதாரரின் மனவிழிப்புநிலை, திறன்கள், மனப்பாங்கு, ஒழுக்கநெறி, தகவல் தொடர்பு திறன், பண்பு மற்றும் தகுதியுடைமை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும்.

குறிப்பு: விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்யப்படும் அனுபவ சான்றிதழை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவர் தகுதியானவர் அல்லது பொருத்தமானவர் என தானாகவே எவ்வித கருத்தும் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு (உரிய படிவத்தினை நமது இணையதள வலைதளத்திலிருந்து (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) பதிவிறக்கம் செய்யவும். பதிவுத்தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். வேறு வகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

2. ஒரு தபால் உறையில் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

3. விண்ணப்பதாரர் ஒரு கவரில் தனது சுய விலாசத்தை எழுதி அதில் ஸ்டாம்ப் (ரூ.30) ஒட்டப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தின் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு, புகைப்படத்தின் மேல் விண்ணப்பதாரர் கையொப்பம் இட வேண்டும். மேலும் உரிய சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பம் (Self Attestation) செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பக் கூடாது. இருப்பினும், நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் தாக்கல் செய்யவேண்டும். சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முற்றிலும் நிராகரிக்கப்படும்.

5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

6. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானவை என தெரியவரும் பட்சத்தில், அவ்விண்ணப்பதாரரின் விண்ணப்பம் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

7. முன்னுரிமை கோரும் நேர்வுகளில், முன்னுரிமைக்கான உரிய சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

8. தமிழ்வழிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இனசுழற்சி முறைக்கு, உரிய சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

9. விண்ணப்பத்தாரர் தனது இருப்பிடச் சான்று குறித்து (i) ஆதார் அட்டை, (ii) வாக்காளர் அடையாள அட்டை, (iii) ஓட்டுநர் உரிமம், (iv) குடும்ப அட்டை, (v) வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

10. விண்ணப்ப படிவத்தின் குறிப்பிட்ட இடத்தில், விண்ணப்பதாரரின் கையொப்பம் இல்லாத விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

11. பொய்யான வாக்குறிதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும்
இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

12. இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்ற நபர்களால் விண்ணப்பத்தாரர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் இந்நீதிமன்றம் பொறுப்பல்ல.

13. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி விதி 16(அ)(1)ன் கீழ் தற்காலிகமாக பணியமர்தப்பட்டு பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் நீதிப்பேராணை எண்.6378/2018 மற்றும் அத்துடன் இணைந்த வழக்குகளில் 30.04.2019 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கிணங்க பரிசீலிக்கப்படும்.

14. ஆதரவற்ற விதவைக்கான முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள், வருவாய் கோட்ட அலுவலர் அவர்களிடமிருந்து உரிய படிவத்தில் பெறப்பட்ட சான்றிதழின் நகலை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பபடவேண்டும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-06-2022 மாலை 5:45 மணி

விண்ணப்பங்களை (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு, உரிய சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணி செய்யும் விபரங்களுடனும் (எதுவும் இருப்பின்) அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத்திருமணம் போன்றவை) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய சுய சான்றொப்பத்துடன் (Self attestation) கீழ்க்காணும் முகவரிக்கு 30-06-2022 ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் – 639007

(காலதாமதமாக கடைசி நாள் அன்று அலுவலக நேரம் அதாவது மாலை 5.45 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ அல்லது நேர்காணலை ஒத்தி வைக்கவோ மற்றும் சூழ்நிலை ஏற்படின் இந்த விளம்பர அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதி, கரூர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

அதிகாரப்பூர்வ மாவட்ட நீதிமன்ற இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்