திண்டுக்கல் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Rural Development and Panchayat Raj Department Dindigul District Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (அ) நேரில் |
காலிப்பணியிடங்களின் விவரம்:
1. அலுவலக உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 3 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2022 அன்று):
பொது பிரிவினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் (முஸ்லிம் தவிர) 18 வயது பூர்த்தி அடைந்தும் 34 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு 2017 திருந்திய ஊதியக்குழு விதிகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் அட்டவணை (Matrix Table Level – 1) குறைந்தபட்சம் தொடக்கநிலை ஊதியம் ரூ. 15,700 – ரூ. 50,000/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறம் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
அரசு விதிகளின் படி இன சுழற்சி முறையினை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை நமது இணையதளத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று (இருப்பவர்களுக்கு) ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக
இருக்க வேண்டும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ. 30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப/சமர்பிக்க வேண்டிய முகவரி:
ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் (இ) செம்பட்டி.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்