You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 30 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை கோயம்பத்தூர் மாவட்டம் வேலை வாய்ப்புகள் 2021
Social Welfare Department of Tamil Nadu Coimbatore Dist Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோயம்பத்தூர் மாவட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

, ’மற்றும் சத்துண சத்துணவுச் ண வத் திட்டத்துறை நலம் சமூக +0 >>>>> +0 K0 தமிழ்நாடு அரசு’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

அரசாணை எண். நிலை.86 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள்: 25.11.2016 -ன்படி, தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் (சென்னை மற்றும் செங்கல்பட்டு) தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

1. மூத்த ஆற்றுப்படுத்துநர் (Senior Counsellor)

2. வழக்கு தொழிலாளி II (Case Worker II)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. மூத்த ஆற்றுப்படுத்துநர் (Senior Counsellor)

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Masters Degree in Social Work) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) உளவியல் ஆலோசனை அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

2. வழக்கு தொழிலாளி II (Case Worker II)

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelors Degree in Social Work) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) உளவியல் ஆலோசனை அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

1. மூத்த ஆற்றுப்படுத்துநர் (Senior Counsellor)

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 20,000/- வழங்கப்படும்.

2. வழக்கு தொழிலாளி II (Case Worker II)

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 15,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

பாலினம்: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளிநகலுடன் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 30.09.2021 மாலை 5 மணிக்குள்‌

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Social Welfare Officer,
District Social Welfare Office,
District Collectrate Campus,
Old Building, Ground Floor,
Coimbatore – 641018

 உதவிக்கு அழைக்க:

Ph No. 0422-2305126

கோவை மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

1. மூத்த ஆற்றுப்படுத்துநர் (Senior Counsellor) பதவிக்கான விண்ணப்பத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. வழக்கு தொழிலாளி II (Case Worker II) பதவிக்கான விண்ணப்பத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்