அரசியலமைப்பு சட்டம் Constitutional Law in TAMIL – ப. அர. ஜெயராஜன் (ஆசிரியர்) – Useful For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations – மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு
Tamil Edition by Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt. (Author)
நமது நாட்டின் மேன்மையான மற்றும் அடிப்படையான சட்டம் “இந்திய அரசியலமைப்பு சட்டம்” ஆகும். இது நமது நாட்டின் நிர்வாகம், சட்டமியற்றுதல், நீதி வழங்குதல் ஆகிய மூன்று அங்கங்களின் கட்டமைப்பை (Institutional Structure) எடுத்துரைக்கின்றது. அவற்றிற்கான அதிகாரங்களை அரசிலமைப்பு சட்டம் தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் வழங்குகின்றது. மேலும் அவ்வதிகாரங்கள் யாரிடம் இருக்க வேண்டும், அவை எப்படி பயன்படுத்தப்பட வேண்டும், அதன் மீதான வரம்புகள் யாவை என்பனவற்றையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் கூறி நெறிப்படுத்துகிறது. தொடர்ந்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவர், இந்திய தேர்தல் ஆணையம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் அதிகாரங்களையும் பணிகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்துரைக்கின்றது.
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் இந்தியக் கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய – மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பல்வேறு உறுபுகள் அல்லது சரத்துகளின் வழியாக நமது அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுக்கின்றது. குறிப்பாக சட்டமியற்றுதல் குறித்த உறவுகள் (Legislative Relations), நிர்வாக உறவுகள் (Administrative Relations), நிதி சார் உறவுகள் (Fiscal Relations) என்ற மூன்று பரந்த வகைப்பாட்டின் கீழ் மத்திய-மாநில உறவுகளை திறம்பட எடுத்திருக்கின்றது. இச்சட்டம், அத்துடன் அரசியலமைப்பின் திருத்தம் பற்றி விரிவான வகைமுறைகளை வகுத்துள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டம்.
மேற்சொன்ன அனைத்து சட்ட நிலைப்பாடுகளையும் இந்த அரிய நூல் விவரிக்கின்றது. இது சிவில் சர்வீஸ் எனப்படும் மைய அரசுப்பணியாளர் தேர்வுகளுக்கும், மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கும், சட்டக் கல்லூரி தேர்வுகளுக்கும் பயன் தரத்தக்கது
குறிப்பு: காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!
– நன்றி
முழு புத்தகத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்