You dont have javascript enabled! Please enable it!

கோவை மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – கோயம்புத்தூர் மண்டலம் வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu state transport corporation Ltd (TNSTC) – Coimbatore region Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கோயம்பத்தூர் லிமிடெட் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் (Apprenticeship training) மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக (12 மாதங்கள்) பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

Job Alerts in Tamil

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

இயந்திர / ஆட்டோமொபைல் பொறியியல் (Mechanical / Automobile Engineering) – 34 பதவிகள்

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

இயந்திர / ஆட்டோமொபைல் பொறியியல் (Mechanical / Automobile Engineering) – 62 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 96 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் முதல் வகுப்பில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் முதல் வகுப்பில் தொழில்முறை அமைப்புகளுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாநில அரசால் நிறுவப்பட்ட தொழில்நுட்ப கல்வி வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து மாநில கவுன்சிலால் வழங்கப்பட்ட முதல் வகுப்பில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 4,984/- வழங்கப்படும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 3,582/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல் http://www.boat-srp.com இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் Organized Events & News Section பிரிவின் கீழ் வெளியிடப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

2) Enroll என்பதைக் கிளிக் செய்யவும்.

3) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

4) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். இதற்கு பிறகு படி 2 க்கு செல்லலாம்.

1) Login செய்யவும்.

2) Establishment Request Menu என்பதை கிளிக் செய்யவும்.

3) Find Establishment என்பதை கிளிக் செய்யவும்.

4. Resume அலோடு செய்யவும்.

5. நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு..

6. “BOARD OF APPRENTICESHIP TRAINING (SOUTHERN REGION)” என்று எழுதி சர்ச் செய்யவும். அதில் [STNCHC000041] கவனிக்கவும்

7. apply என்பதைக் கிளிக் செய்யவும்.

8. மீண்டும் apply என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-10-2021 31-10-2021 தற்பொழுது நீட்டிக்கப்பட்டது.

BOAT -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ நீட்டிக்கப்பட்ட அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்