You dont have javascript enabled! Please enable it!

கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோயமுத்தூர் மாவட்டம் மாவட்ட நலச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில்
பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor)

2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

3. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians )

4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)

5. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

6. வாகனம் ஓட்டுபவர் (Driver)

மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்

கல்வித்தகுதி:

1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor)

அடிப்படை தகுதி:

i) +2 வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் படிப்பு B.Sc (MLT) அல்லது சான்றிதழ் (DMLT) இருக்க வேண்டும்.

ii) ஆய்வுக்கூடத்தில் குறைந்தது இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

iii) இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

முன்னுரிமை தகுதி:

காசநோய் பரிசோதனையில் ஒரு வருட முன் அனுபவம் விரும்பப்படுகிறது.

2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

அடிப்படை தகுதி:

i) +2 வில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் படிப்பு B.Sc (MLT) அல்லது சான்றிதழ் (DMLT) இருக்க வேண்டும்.

முன்னுரிமை தகுதி:

காசநோய் பரிசோதனையில் ஒரு வருட முன் அனுபவம் விரும்பப்படுகிறது.

3. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians)

i) B.Sc / Biotechnology / Microbiology

ii) இளங்கலை பட்டப்படிப்பு

iii) (10+2) மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர் பட்டம் அல்லது பட்டயம்

iv) கனிணி பயிற்சி சான்றிதழ்

4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பல்நோக்கு சுகாதாரம் (MPW) அல்லது LHV அல்லது ANM அல்லது Health worker அல்லது சுகாதாரக் கல்வி அல்லது ஆலோசகர் படிப்பு காசநோய் சுகாதார பார்வையாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) கணினி பயிற்சி சான்றிதழ் (குறைந்த பட்சம் இரண்டு மாதம் பயிற்சி) இருக்க வேண்டும்.

5. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

i) (10+2) மற்றும் கணிப்பொறிப் பயன்பாடு பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையான DOEACC அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது பட்டயம்

ii) தட்டச்சு வேகம் 40WPM தமிழ் மற்றும் ஆங்கிலம்

iii) MS office மற்றும் எளிய புள்ளியல் package

6. வாகனம் ஓட்டுபவர் (Driver)

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

ii) நிரந்தர ஓட்டுநர் உரிமம்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.

2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.

3. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians )

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 19,000 வழங்கப்படும்.

4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.

5. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 12,000 வழங்கப்படும்.

6. வாகனம் ஓட்டுபவர் (Driver)

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 10,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த காலி பணியிடங்கள் வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும.

சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிக்கப்படுவதும் NTEPயின் அதிகாரத்திற்கு உட்பட்டது.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport size photo உடன் தங்கள் அனைத்து கல்வித் தகுதி
சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான
பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் 25 மதிப்புள்ள தபால் தலைகளை ஓட்டிய
சுய விலாசமிட்ட கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 11-03-2022

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அதுவலகம், மாவட்ட காசநோய் மையம், எஸ் 219, DDHS வளாகம், பந்தய சாலை, கோயமுத்தூர்-641018

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்