தமிழ்நாடு மாநில தத்துவள ஆதார மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil Nadu State Department of Social Defence, State Adoption Resource Agency (SARA) Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சமூக பாதுகாப்பு இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, சென்னை அவர்கள் மாநில தத்துவள ஆதார மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட முற்றிலும் தற்காலிக பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரம்:
1. திட்ட அலுவலர்
கல்வித்தகுதி:
சமூக பணி/ சமூகவியல்/ குழந்தைமேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/மனநலம்/சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருத்தல் வேண்டும். (10+2+3) முறையில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும்.
அல்லது
சமூக பணி/ சமூகவியல்/ குழந்தைமேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/மனநலம்/சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை / சமூக நலம் துறை ஆகியவற்றில் திட்டம் உருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். (10+2+3) முறையில் கல்வி பயின்றிருத்தல் வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
ஒப்பந்த அடிப்படையில் மாத தொகுப்பூதியம் ரூ. 34,755/-
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் உள்ள விண்ணப்பத்தை விண்ணப்பதாரர் சரியாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்து, விண்ணப்பதாரரால் முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு, முறையாக சுய சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்(கள்) முழுமையான தகவல் இல்லாமல் அல்லது விரும்பிய சான்றிதழ்களின் நகல்கள் இல்லாமல் அல்லது சுய சான்றொப்பம் இல்லாமல் விண்ணப்பம்(கள்) நகல்/நகல்களை இணைத்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் அல்லது தகவலும் தெரிவிக்காமல் நேரடியாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர் உறையின் மீது “Application for the post of Programme Officer” என்று எழுத வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இயக்குநர், மாநில தத்து வள ஆதார மையம் சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ், சென்னை-10. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வேறு எந்த வகையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பங்கள் தகுதி அளவுகோல்களின்படி பரிசீலிக்கப்படும் மற்றும் போட்டி தேர்வின் மூலம் தேவையான தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி: 26.08.2022 அன்று மாலை 05.00 மணி
அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!