You dont have javascript enabled! Please enable it!

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வேலைவாய்ப்புகள் 2021
Chennai Metropolitan Development Authority – CMDA Recruitment Notification 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவிக்கு இனசுழற்சி
அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதால், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamilancareer.com -

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. ஒட்டுநர் (Driver)

மொத்தம் பணியிடங்கள்: 25 பதவிகள்

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

i) அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ii) செல்லத்தக்க நிலையிலுள்ள LMV ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன விதிகளின்படி ஒப்பளிக்க தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

iii) குறைந்தது 2 வருடம் வாகனம் ஓட்டிய முன் அனுபவ சான்று பெற்றிருக்க வேண்டும்.

iv) முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

v) உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஒட்டுநர் பதவிக்கான விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு அதிகபட்ச வயது 37 ஆகும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) வகுப்பினர்களுக்கு அதிகபட்ச வயது 34 ஆகும்.

இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகும்.

முன்னாள் இராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை ஊதிய விகிதம் நிலை 8 -ன் படி மாத சம்பளம் குறைந்தப்பட்சம் ரூ. 19,500 முதல் அதிகப்பட்சம் ரூ. 62,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே செய்முறை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

செய்முறைத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பங்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் www.cmdachennai.gov.in  என்ற இணையதள முகவரியில் Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் (Recent Passport size photo) மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். (குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

3. OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

4. தகுதியில்லாத மற்றும் விண்ணப்பக் கட்டணம் முறையாக செலுத்தாமல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

5. விண்ணப்பதாரர் தனது இருப்பிட சான்று குறித்து ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை எதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்,

6. விண்ணப்பதாரர் தனது பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், முன் அனுபவத்திற்கான சான்றிதழ் மற்றும் வாகன பராமரிப்பு அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (self attested) முறையாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

7. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ மற்றும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

8. ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் இளநிலைப் பட்டத்திற்கு (10, + 2, + 3) குறைவாக இருந்தால் அப்பதவிக்கு ஆதிதிராவிட அல்லது ஆதிதிராவிட (அருந்ததியர்) அல்லது பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் அல்லது இசுலாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் அல்லது அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவை ஆகியோர் தமிழ் நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016, பிரிவு 20(1)-ல் குறிப்பிடப்பட்ட குறைந்த அளவு பொதுக்கல்வி தகுதிக்கு மேற்பட்ட பொதுக்கல்வி தகுதி பெற்றிருந்தால் அவருக்கு அப்பதவிக்கான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு விதி பொருந்தாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2021

 CMDA அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்