ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் வேலைவாய்ப்புகள்!
Rajah Muthaiah Medical College & Hospital (RMMCH) Chidambaram Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கொரோனா வைரஸ் (COVID-19) பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு அரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்ட காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால்/ நேரடி |
பணியிட விபரங்கள்:
1. மருத்துவ அதிகாரி (Medical Officer) – 11 பதவிகள்
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician) – 10 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 21 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. மருத்துவ அதிகாரி (Medical Officer)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழத்தில் இளங்கலை மருத்துவ பட்டம் (MBBS) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் (TNMC) பதிவு செய்து தற்போதுவரை செல்லுபடியாகும் வகையில் புதுப்பித்திருக்க வேண்டும்.
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ ஆய்வக நுட்புநர் இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு (DMLT) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் வழிமுறை பின்பற்றப்படும்.
சம்பள விகிதம்:
1. மருத்துவ அதிகாரி (Medical Officer)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 60,000 வழங்கப்படும்.
2. ஆய்வக நுட்புநர் (Lab Technician)
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும். தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அதனை சார்ந்த நகல்களுடன் ஆஜராகுமாறு தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது. 1. கல்விச்சான்று 2. இருப்பிடச்சான்று 3. ஆதார் அட்டை அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தரம் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-09-2021 மாலை 5 மணி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
புல முதல்வர்
ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை
அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலைநகர் – 608 002.
RMMCH அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!