You dont have javascript enabled! Please enable it!

சென்னை ICMR NIRT- தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ICMR-National Institute for Research in Tuberculosis (NIRT) Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை தேசிய காசநோய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய (திட்டத் தேவைகள் & திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை||சம்பளம் ரூ .29565||பணியிடம் : சென்னை - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்)

2. ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்பவியலாளர்)

3. IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்).

4. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து Statistics/ Applied Statistics/ Bio-Statistics ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறை ந்தப்பட்சம் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

அல்லது

ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து Statistics/ Applied Statistics/ Bio-Statistics ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

2. ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்பவியலாளர்)

3. IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்).

அறிவியல் பாடங்களில் 12 வது தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (DMLT) அல்லது தொடர்புடைய பாடத்தில் இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

அல்லது

ஒரு வருட டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் (DMLT) மற்றும் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு/ நிறுவனத்தில் 2 வருட கள/ஆய்வக அனுபவம்* இருக்க வேண்டும்.
(* பி.எஸ்சி. 3 ஆண்டுகள் அனுபவமாக கருதப்படும்)

4. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்)

உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு சமமான சுகாதாரத் துறையில் ஏதேனும் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு/ நிறுவனத்தில் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்)

2. ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்பவியலாளர்)

3. IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்).

மேற்கண்ட பதவிகளுக்கு அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

4. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்)

அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

1. திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் 32,000 வழங்கப்படும்.

2. ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்பவியலாளர்)

3. IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்).

மேற்கண்ட பதவிகளுக்கு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் 18,000 வழங்கப்படும்.

4. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் 17,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது. இறுதி பரிந்துரைகள் செயல்திறன் அடிப்படையில் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையில் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒன்றாக இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 03.12.2021 காலை 09:00 மணி

 நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai – 600 031.

NIRT- அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்