You dont have javascript enabled! Please enable it!

சென்னை அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Government Children’s Hospital and Research Centre, Egmore, Chennai Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோவிட்‌ 19 பேரிடர்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

Job Alert : ரூ.12,000 சம்பளம்... அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி





பணியிட விபரங்கள்:

1. செவிலியர்‌

மொத்த பணியிடங்கள்: 35 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்திலிருந்து டிப்ளமோ (DGNM) நர்சிங் அல்லது டிகிரி (B.Sc) நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 14,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அனைத்து கல்வித்‌ தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இப்பணியிடங்கள்‌ முழுவதும்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ நிரப்பப்பட உள்ளன .மேலும்‌ இப்பணியிடங்கள்‌ எக்காரணம்‌ முன்னிட்டும்‌ பணி வரன்முறை மற்றும்‌ நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

 விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 11.10.2021 மாலை 4.30 மணிக்குள்‌

குறிப்பு: நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌(11.10 .2021) பிறகு கிடைக்கப்‌ பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது.

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ (முகூபொ)

அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

எழும்பூர்‌ , சென்னை – 8 .

ICHCH அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை , எழும்பூர் , சென்னை-8.
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிப்பு வேலை ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு:

கோவிட் 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக
சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 35 செவிலியர் பணியிடத்திற்கு
ரூ.14,000/- ஊதியத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும்
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு செய்தி 08.10.2021 அன்றைய
செய்தி தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது கொரோனா நோயின் தன்மை வெகுவாக குறைந்து வருவதால்
பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 6 மாத காலத்திற்கான ஒப்பந்த அடிப்படையில்
தற்காலிக செவிலியர் பணிக்கான ஆள் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

என இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ வேலை ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு (Job Cancelled Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்