சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் சென்னை வேலை வாய்ப்புகள் 2021
Siddha Central Research Institute (CCRS) Chennai Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னையில் இந்திய அரசு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (வேதியியல்)
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)
3. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (சித்தா)
4. கள உதவியாளர்
5. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (வேதியியல்)
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து MSc in Chemistry / Analytical Chemistry / Inorganic Chemistry ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து MSc in Botany / Medicinal Plants / Plant Sciences or M.Pharm in Pharmacognosy ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
3. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (சித்தா)
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து Bachelor of Siddha Medicine and Surgery (BSMS) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்
4. கள உதவியாளர்
உயிரியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தாவரவியல் பாடத்தை கொண்ட பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
i) தாவரவியல் பாடத்தை உள்ளடக்கிய ஏதாவது ஒரு டிகிரி.
ii) கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களில் அறிவுத்திறன்.
iii) போட்டோஷாப் தெரிந்திருக்க வேண்டும்.
iv) அறிவியல் அறிக்கை தயாரிப்பில் அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு (01-01-2021 ன் படி):
அதிகப்பட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
உச்சப்பட்ச வயது வரம்பில் OBC க்கு மூன்று ஆண்டுகள் வரையும், SC/ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விகிதம்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (வேதியியல்)
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)
3. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (சித்தா)
மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 31,000/- மற்றும் 24% HRA கூடுதலாக வழங்கப்படும்.
4. கள உதவியாளர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 15,000/- வழங்கப்படும்.
5. டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 20,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 07-10-2021 காலை 10:30 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:
Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai- 600 106
CCRS -ன்அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!