You dont have javascript enabled! Please enable it!

தமிழக அரசின் நிதித்துறை இன்டர்ன்ஷிப் திட்டம் 2022-23 விண்ணப்பங்கள் வரவேற்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 01 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு, நிதித்துறையின் உள்ளிருப்பு பயிற்சித் (2022-23) திட்ட வாய்ப்பு அறிவிப்பு 2022

Government of Tamil Nadu Finance Department Internship Programme 2022-23



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசு, நிதித்துறையின் உள்ளிருப்பு பயிற்சித் (2022-23) திட்டத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

எந்தவொரு மாநிலத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பயனுள்ள நலத்திட்டங்களுக்கான செலவினங்களுடன் இணைந்த வலுவான நிதிக் கொள்கை மிக முக்கியமானது. ஒரு நாட்டின் வளர்ச்சி, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு முதுகெலும்பாக அந்நாட்டின் நிதித்துறை காரணமாக அமைந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அனைத்து திட்டங்கள், கொள்கை முன்முயற்சிகள் மற்றும் அரசின் அன்றாட செயல்பாடுகளிலும் பங்கேற்கிறது. விவேகமான நிதி நிர்வாகத்தை காட்டிலும் கூடுதலாக வரி செலுத்துவோரின் பணத்தை சிறந்த முறையில் செலவினம் மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை கருத்திற்கொண்டு, நிதித்துறையின் நோக்கங்களை விரிவுபடுத்த பங்குதாரர்களின் அறிவுத் தொகுப்பை இச்செயல்பாட்டில் விரிவு படுத்துவது அவசியமானதாகும். இதற்காக நிதித்துறை உள்ளிருப்பு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொருளாதாரம், நிதி, சட்டம், வணிகம், மேலாண்மை தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளில் திறன்மிகு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி அவர்கள் நிதித்துறையின் செயல்பாட்டினை அறிந்துகொள்ளச் செய்து அவர்களின் அறிவார்ந்த ஆராய்ச்சிப்பணிக்கு பங்காற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இத்திட்டத்தின் கல்வி பங்களாராகச் செயல்படும்.

இத்திட்டத்திற்கு மொத்தம் இருபது நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் நிதித்துறையின் கீழ்க்காணும் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்படுவார்கள்.

கல்வித்தகுதி:

முதுகலைப் பட்டதாரி/ஆய்வு மாணவர் புள்ளியியல், தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, வணிகம், சட்டம், நிதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் அல்லது ஆய்வு மாணவர். விண்ணப்பதாரர் தனது முதுகலைப் பட்டப்படிப்பில் உயர் மதிப்பெண் [(குறைந்தபட்சம் 75% அல்லது ஒட்டுமொத்த சராசரி தரப்புள்ளி (CGPA 7.5)] பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வுப்பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரருக்கு தமிழ்மொழி அறிவு அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது 24.06.2022-ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

கால அளவு மற்றும் உதவித்தொகை:- இந்த உள்ளிருப்பு பயிற்சித் திட்டம் ஓராண்டு காலத்திற்கானது (குறைந்த அளவு 6 மாதங்கள்). மாத உதவித் தொகை ரூ.20,000/- இதைத்தவிர கூடுதல் நிதியுதவி ஏதும் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இணையவழி விண்ணப்பங்களை www.bim.edu/tnfdinternship என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.





தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செயல்முறை:-

நிலை 1 : இணையவழி மதிப்பீடு (கணினி அடிப்படையிலானது)
நிலை 2 : நேர்முகத் தேர்வு

(i) இணையவழி மதிப்பீடு:

அதிக பட்சம் 100 புள்ளிகளைக் கொண்ட கொள்குறி வகை வினாக்களை கொண்ட கணினி அடிப்படையிலான தேர்வு. விண்ணப்பதாரர் மூன்று பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

(1) Quantitative Reasoning – 10-ஆம் வகுப்பு நிலையிலான இயற்கணிதம், எண்கள் வடிவியல், புள்ளியியல் மற்றும் தரவு விளக்கம் போன்ற அடிப்படை கணிதத் திறன்களை மதிப்பிடுவதற்கு (2) Verbal comprehension and Logical Reasoning – விண்ணப்பதாரர்களின் புரிதல் மற்றும் தொடர்புத்திறன், பகுப்பாய்வுத் திறன் முடிவுகளை மேற்கொள்ளுதல் மற்றம் இடையூறுகளை நீக்கும் திறன் பொதுவான பகுப்பாய்வுத்திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு மற்றும் (3) General Awareness and Economic Affairs – பொது அறிவு மற்றும் பொருளாதார விவர அறிவு. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படும். (ஒவ்வோர் தவறான பதில்களுக்கும் 0.33 புள்ளிகள் குறைக்கப்படும்). தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், டில்லி மற்றும் மும்பை நகரங்களில் தேர்வு மையங்கள் இருக்கும். தேர்வு மையங்கள் மாறுதலுக்குட்பட்டவை.

(ii) நேர்முகத் தேர்வு:- விண்ணப்பதாரரின் தகுதி, ஆய்வுத்திறன், அறிவாற்றல் மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றை சோதிக்க சம்பந்தப்பட்ட கள நிபுணர்களுடன் கூடிய வல்லுநர் குழுவினால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் இணையவழி மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் இடவொதுக்கீடு முறைகளை பின்பற்றி திறன் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் செய்திட இணையதளம் திறக்கப்படும் நாள்: 24.06.2022

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கடைசி நாள்: 01.07.2022

தேர்விற்கான மின்னணு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் நாள்: 08.07.2022

இணையதளத் தேர்வு நாள்: 16.07.2022

நேர்முகத் தேர்வு நாள்: ஜூலை 2022 மாதத்தின் மூன்றாவது வாரம்

பயிற்சி தொடங்கும் நாள்: ஆகஸ்டு 2022 மாதத்தின் முதல் வாரம்

தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. இதற்கான தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதை www.bim.edu/tmfdinternship என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 01.07.2022 அன்று மாலை 6.00 மணி வரை இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்