You dont have javascript enabled! Please enable it!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்: 03 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Anna University Teaching Faculty Vacancies Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை மிஸ் பன்னிடாதிங்க! - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன், இமெயில் & தபால்





பணியிட விபரங்கள்:

1. உதவி பேராசிரியர்கள் – 18 பதவிகள்

2. துணைப் பேராசிரியர்கள் – 8 பதவிகள்

3. பேராசிரியர்கள் – 14 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 40 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

துறை பெயர்கள் மற்றும் தகுதி:

A. பொறியியல் & தொழில்நுட்பம்

B. கட்டிடக்கலை

C. நகரத் திட்டமிடல்

D. அறிவியல் மற்றும் மனிதநேயம்

i) யுஜிசி விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் தொடர்புடைய பாடப் பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது NET / SLET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01-07-2020-ன் படி):

உதவி பேராசிரியர்கள்

24 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இணை பேராசிரியர்கள்

30 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

பேராசிரியர்கள்

35 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

ஊதியம் மற்றும் இதர கொடுப்பனவுகள் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துறையின்படி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

SC/SC (A)/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 400/ – செலுத்த வேண்டும். .

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 1000/ – செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே எழுத்து தேர்விற்கு அழைக்கப்படுவர்.

எழுத்து தேர்வில் தகுதி பெறுவோர் அடுத்து துறைசார்ந்த பாட அறிவு சோதிக்கப்படும். பின்பு தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் தனிப்பட்ட நேர்காணல் நடைபெறும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே எழுத்து தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

பின்பு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தபால் உறையின் மேல் “Application for the post of ___________________ in the Department(s) of ______________ and code No(s). ______.  கட்டாயம் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

ஆன்லைன் & இமெயில் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-11-2021 மாலை 5:30 மணி

தபால்  மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-11-2021 மாலை 5:30 மணி

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:

annauniversityrecruitmentcell@gmail.com

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Anna University, Chennai – 600 025.

AU அதிகாரப்பூர்வ இணையத்தளம் செல்ல  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்

முதுகலை பொறியியல் பட்டம், முதுகலை பட்டம் & பி.ஹச்டி தகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 October 2021 விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்